643. வினையினைச் செய்தலுந் துய்ந்த லும்மிலை
நினைவது தோன்றிமீட் டுணர்வ தும்மிலை
யினையதான் வேண்டிய விட்ட மாறொடு
முனைதலுஞ் செயுநித்த முற்ற வேண்டினால்.
(இ-ள்.)
நித்தம் - நித்தியத்துவத்தை, முற்றவேண்டினால் -
முழுதும் ஸர்வதா ஸாதித்தால், வினையினை
- கருமங்களை,
செய்தலும் - செய்வதும்,
துய்த்தலும் - அதன்பலனை
யனுபவித்தலும், இலை - இல்லையாம், (அதாவது : இந்தக்
கர்ம
பலஸம்பந்தேஷ்டம் உண்டாகப் பட்டதில்லை),
நினைவது -
ஞானமானது, தோன்றி -
உண்டாகி, மீட்டு - திரும்பவும்,
உணர்வதும் - அறிவதுமாகிய தன்மை, இலை -
இல்லையாம் -
(அதாவது : இந்த ப்ரத்தியபிஜ்ஞானேஷ்டமும் உண்டாவதில்லை),
இனையதான் - இத்தன்மையானவைகள், (வேதத்தில்), வேண்டிய
- இச்சிக்கப்பட்ட, இட்டமாறொடும் - இந்த ஆறு இஷ்டங்களோடு,
முனைதலும் செய்யும் - (ஸர்வதா நித்தியமானால்)
மாறுபடலைச்
செய்யும், (ஆகையால் ஸ்யாதனித்தியமே
இஷ்டங்களுக்கு
அவிருத்தம்), எ-று.
(83)
644. கடன்கொடுத் தான்கொளான் கொண்ட வன்கொடான்
மடந்தைதன் சிறுவனும் வளர்ச்சி யெய்திடான்
றொடங்கியே நூன்முடித் தோதி னான்சொலான்
றிடம்பொரு ளெனிற்றிட்ட மூன்று மாறெய்தும்.
(இ-ள்.) கடன்
கொடுத்தான் - இவ்வுலகத்தில் கடன்
கொடுத்தவன், கொளான் -
கொடுத்தகடனை மறுபடியும்
வாங்கமாட்டான், கொண்டவன் - வாங்கிக்கொண்டவன், கொடான்
- மறுபடி கொடுக்கமாட்டான், (அதாவது
: லோக ப்ரவர்த்தி
திருஷ்டத்திற்கு மாறுபடும்), மடந்தை தன் சிறுவனும் - ஸ்த்ரீயினால்
பெறப்பட்ட அவளது பாலகனும்,
வளர்ச்சியெய்திடான் -
வளரமாட்டான், (அதாவது : புருஷப்ரவர்த்தி
திருஷ்டத்திற்கு
மாறுபடும்), நூல் -
ஒரு சாஸ்திரத்தை, தொடங்கி -
சொல்லத்தொடங்கி, முடித்தோதினான் -
முழுமையும் முடித்து
ஓதியவனாக, சொலான் - சொல்லமாட்டான்,
(அதாவது :
சாஸ்திரப்ரவர்த்தி திருஷ்ட விருத்தம்), பொருள்
தத்துவமானது,
திடமெனில் - ஸர்வதா நித்தியமென்று சொன்னால், திட்டமூன்றும்
- இந்த திருஷ்டங்கள் மூன்றும், மாறெய்தும்
- மாறுபாட்டை
யடையும், (ஆகையால் திருஷ்ட விருத்தமாகா
தத்துவம் ஒரு
பிரகாரத்தால் நித்யமென்பதும் மற்றொரு பிரகாரத்தால்
அனித்திய
மென்பதுமாகிய ஸ்யாத்வாதம் பெறப்படும்), எ-று. (84)
645. தன்சொல்மா றாகிமேற் கோள ழிந்ததன்
பின்பிறன் கோள்பிடித் திட்ட திட்டமா |