மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 297


 

     (இ-ள்.)   கணங்  கணந்  தோறும்  -  சமயஞ் சமயந்தோறும்,
தோற்றமும்  -  நூதனமாக   வுண்டாவதும் (அதாவது : உத்பாதமும்,)
கேடும்  -    (அப்படி      உத்பாதமானது      தத்சமயத்திலேயே)
நாசத்தையடைவதும்   (அதாவது :    வியமும்),   ஆய்  -  இப்படி
உத்பாதவியமாகி,   தணந்ததே  -  சேர்ந்ததே,  தத்துவம் - ஸர்வதா
அனித்திய    தத்துவமாகும்,    நிலை - த்ரௌவ்யயுக்தமான நிலை,
இல்லெயெனில்   -   ஸர்வதா     இல்லையென்று     சொன்னால்,
கணங்கணந்தோறும்     -    சமயஞ்சமயந்தோறும்,   கெட்டவன் -
வ்யயமானவன்,     கேட்டினை   -    அப்படிச்   சமயம்  சமயம்
நூதனமாகத்தோன்றி    வியமான    நாசத்தை, உணர்ந்து - ஒருவன்
அறிந்து,    சொல்லுமோ   -   சொல்லுவானோ?    இல்லையோ -
சொல்லமாட்டானோ?,    உண்டு - சொல்லப்பட்டவனுண்டு, எனில் -
என்று சொல்லுமிடத்தில், எ-று.                             (87)

 648. அவிந்த வவ்விளக் கேயிரு ளைக்கெடச்
     சிவந்து நின்றெரி யும்மெனச் செப்பினா
     னிவந்து நின்றொரு வன்சொலு மொன்றிடி
     லுவந்த னித்தமு நித்தமு மொட்டினான்.

     (இ-ள்.)   அவிந்த  -  அவிந்துபோகப்பட்ட,  அவ்விளக்கே -
அந்தத்   தீபமே,  இருளை - அந்தகாரத்தை, கெட - சிறிது நேரம் -
நீங்கும்படியாக,   சிவந்து   நின்று  -  சிவப்பாகியிருந்து,   எரியும் -
பிரகாசிக்கும்,   என   -   என்று,   செப்பினான்  -  திருஷ்டாந்தம்
சொல்லப்பட்டவனாகி,   நிவந்து   நின்று,   அதுபோலப் பிரகாசித்து
நிமிர்ந்து   நின்று,   ஒருவன்   -   நாசத்தையடையப்பட்ட ஒருவன்,
சொலும்  -  சொல்லுவான்,  என்றிடில் - என்று சொன்னால், உவந்து
- மகிழ்ந்து,   அனித்தமும்   -   அனித்தியத்தையும்,    நித்தமும் -
நித்தியத்தையும், ஒட்டினான் - சேர்ந்தவனாகும், எ-று.          (88)

 649. மாய்ந்த வன்கண்ட வப்பொரு ளும்மனத்
     தாய்ந்து தோன்று மவன்சொலு மென்றிடின்
     மாய்ந்த னந்தர் மனத்தெப் பொருளையு
     மாய்ந்து சொல்லுவ தாவது மாகுமே.

     (இ-ள்.)   (அப்படி நின்று  உணர்ந்து சொல்லும் ஒருவனில்லை)
மாய்ந்தவன்  -  பிரதம   ஸமயத்தில்   நாசமாகப்பட்டவன், கண்ட -
அறிந்த,  அப்பொருளும் - அந்தப் பொருளையும், மனத்து - மனதில்,
தோன்று   மவன்  -  பின்  சமயத்தில்   உண்டாபவன்,  ஆய்ந்து -
ஆராய்ந்து, சொலும் - சொல்லுவான்,  என்றிடில் - என்றால், மாய்ந்த
- அதற்குமுன் அனாதியாகவே நாசமாகப்பட்ட, அனந்தர் - அனந்தம்
பேர்களுடைய, எப்பொருளையும் - எல்லாக்காரியங்களையும், மனத்து
- மனதில்,   ஆய்ந்து   -   தத்சமய    வர்த்தியாயவன் ஆராய்ந்து,
சொல்லுவதாவது    -    சொல்லுகின்றதாவதும்,   ஆகும் - முடியும்,
(அப்படிக்குக்