கூடாமையால் பிரத்தியக்ஷ விரோதமும்,
அப்படிக் கூடுமானால், அது
நித்திய ஸ்வரூபமுமாகும்) எ-று. (89)
650. சித்த முன்னதும் பின்னதுந் தத்தமி
லத்தி யந்தம்வே றாகுறிற் சொன்னதா
மத்தி யந்தம்வே றல்லவே யாய்விடி
னித்த மொட்டினா னின்றதொன் றுண்மையால்.
(இ-ள்.) சித்தம்
- மனவெண்ணம், முன்னதும் - முன் சமயத்து
நின்றவனதும், பின்னதும் - மறுஸமயத்தில் தோன்றியவனதும்,
தத்தம்மில் - தங்கள் தங்களுக்குள், அத்தியந்தம்
- மிகவும்,
வேறாகுறில் - ஒன்றுக்கொன்று வித்தியாசமானால்,
சொன்னது -
ஸர்வதா அநித்தியமென்று சொன்னது, ஆம் - ஆகும், அத்தியந்தம்
- மிகவும், வேறல்லவேயாய்விடின் -
வித்தியாசப்படாதனவாய்
ஒத்திருந்தால், நின்ற -
ஸ்திரமாகநின்றது, ஒன்று -
த்ரௌவ்யயுக்தமாகிய ஒன்று, உண்மையால் - இருக்கின்றபடியால்,
நித்தம் - நித்தியத்தையும்,
ஒட்டினான் - (அவன்)
பொருந்தினவனாகும், எ-று.
(90)
651. அறிவ னாங்கிரண் டும்மறி யும்மெனி
லறிவ னாமவன் யார்கொ லறிந்திலோம்
நெறியி னாற்றவஞ் செய்துநின் றோடியா
னறிவ னென்றிடி லாங்கவ னில்லையே.
(இ-ள்.) அறிவன்
- ஞானியானவன், ஆங்கிரண்டும் - அப்படி
முன் ஸமயம் பின் ஸமயமாகிய விரண்டின் காரியத்தையும், அறியும் -
தெரிந்துகொள்ளும், எனில் - என்று சொல்லுமிடத்தில், அறிவனாமவன்
- அப்படி ஞானியாக்கப்பட்டவன், (க்ஷணவிநாச ஸ்வரூபமாகிய
ஸர்வதா அனித்தியதத்துவத்தில்), யார் கொல்
- எவரோ?,
அறிந்திலோம் - தெரிந்திலோம், நெறியினால்,
கிரமத்தினால்,
தவஞ்செய்து - தபத்தை செய்து, நின்று - த்ரௌவ்யயுக்தமாகி நின்று,
ஓடியான் - நீடித்திருப்பவன், அறிவன் - ஞானியாகும், என்றிடில் -
என்று சொல்லுமிடத்தில், ஆங்கவன் - அப்படி நித்தியமாயுள்ளவன்,
இல்லை - அத்தத்துவத்தில் இல்லை, எ-று.
(91)
652. வாரி யோட்டில் வலாகரித் திட்டபோற்
பார மீதைகள் பத்தும் பயின்றவத்
தார்வத் தோடு மறித்தறி வெய்திடி
னேரி னித்தமு மொட்டின னாகுமே. |