300மேருமந்தர புராணம்  


 

பெற்று  மறு  ஜன்மத்தில்  கௌதமபுத்தனாக அவதரித்தான் - என்று
சொல்லியிருப்பதையும் காண்க.

    (Buddhist  Birth  Stories  or  Jataka Tales translated by T. W. Rhys Davids.)

     வலாகம்   என்பது   அம்   -  விகுதி  குறைந்து வலாகு என
நின்றது.                                                (92)

 653. வெந்த ஒட்டில் விழுந்தவத் துள்ளிபோல்
     வந்த பாவனை யோடவன் மாயுமேல்
     மைந்து போனவ னல்லன்மற் றார்கொலோ
     பந்த மொன்றிலாப் பாழ்முத்தி நாதனே.

     (இ-ள்.)   வெந்த   ஓட்டில்  -  அக்கினியில் காய்ந்த ஓட்டில்,
விழுந்த   -   வீழ்ந்ததாகிய,   அத்துள்ளிபோல்   -   அந்த  நீர்த்
துளியைப்போல்,  வந்த   -   வரப்பட்ட   (அல்லது)   உண்டாகிய,
பாவனையோடு   -   பரிணாமத்தோடு,  அவன்  -  அவ்வொருவன்,
மாயுமேல்  -  அக்ஷணத்தில் நாசமாவானேயானால், மைந்துபோனவன்
- ஒரு  வலி  பெற்றாகிலும்  அல்லது   மயக்கமுற்றாகிலும்  மாய்ந்து
போனவன்,   அல்லன்   -  அல்லாதவனாகும்,     (ஆகையினால்),
பந்தமொன்றில்லா   -  யாதொரு  பந்தமுமில்லாத, பாழ் - பாழாகிய,
முத்தி   -   அவர்களால்   சொல்லும்    நிர்வாணத்திற்கு, நாதன் -
உரித்தானவன், யார்கொல் - எவனோ?, எ-று.

     வலி     -   அழகென்றேனும்,    அல்லது தெளிவென்றேனும்
பொருள்தரும்.   யார்கொல்   என்பது - யார் கொலாம் என்றும் சில
பிரதிகளில் பாட பேதமாகக் காணப்படும்.                    (93)

 654. ஆத லாலனித் தம்பிடித் தாத்தனாம்
     போதி யானையும் போக வெறிந்தவ
     ரோது நூல்களு மொட்டறக் கெட்டபின்
     யாதி னானிலை யாமை நிறுத்துவார்.

     (இ-ள்.)   ஆதலால் - ஆகையினால்,  (இந்த விரோதமெல்லாம்
அறியாமல்),      அனித்தம்   பிடித்து    -   ஸர்வதாவனித்தியமே
தத்துவமென்றுறுதியாகப்   பிடித்து,   ஆத்தனாம்  -  முக்கியனாகிய,
போதியானையும்    -    புத்தனாகிய   விறைவனையும்,    போக -
அனித்தியமாகும்படி,    எறிந்து   -   கெடுத்து,   அவர்  -  அந்த
க்ஷணவிநாசம்     தத்துவமென்று     சொல்பவர்களால்,    ஓதும் -
சொல்லப்பட்ட,     நூல்களும்    -    சாஸ்திரங்களும்,   ஒட்டற -
ஒட்டுதலின்றி  முழுதும்,   கெட்டபின் - ஸர்வதா அனித்தியமானதால்
கெட்ட பிறகு,  யாதினால் - எதனால், நிலையாமை - அனித்தியத்தை,
நிறுத்துவார் - ஸ்தாபிப்பார்கள், எ-று.                        (94)