மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 301


 

வேறு.

 655. நவ்வெனச் சொல்லினான் சொன்ன வந்நவு
     மவ்வவக் கணத்திலே யழிந்து போதலால்
     நவ்வையே நவ்வையே நவிற்றி னல்லது
     மொவ்வினை யனித்தமென் பார்கள் மூட்டிடார்.

     (இ-ள்.) நவ்வெனச் சொல்லினான் - ஸர்வதா அனித்தியமென்றே
தத்துவத்தை   ஸாதிப்பவர்கள்  நமோவென்று சொல்லவேண்டி அதன்
பிரதம அக்ஷரமாகிய நகரத்தை நவ்வென்று சொன்னவனும், சொன்ன -
அவனாற்   சொல்லப்பட்ட,    அந்நவும்   -   அந்த     நகரமும்,
அவ்வக்கணத்திலே   -  அந்தந்த ஸமயத்திலே, அழிந்துபோதலால் -
ஸர்வதா   அனித்தியத்தால்  நாசமாவதால், அனித்தியமென்பார்கள் -
அனித்தியமென்னும் அந்த  அனித்தியவாதிகள், நவ்வையே நவ்வையே
- நகரத்தையே நகரத்தையே,  நவிற்றினல்லது - சொல்வதேயல்லாமல்,
மொவ்வினை   -   மோவென்னுமக்ஷரத்தை,  மூட்டிட்டார் - சொல்ல
முடியாதவர்களாக அத்தத்து வத்தாலாகா நின்றார்கள், எ-று.     (95)

 656. வாசத்தைப் போல்வமென்னின் மாமலர்
     நாசத்தைச் செலாதமுன் னண்ணு மொட்டிடை
     வாசத்தை வைத்துப்பின் மாயு மாறுபோல்
     பேசிற்றுண் டோபிறி தோடு நிற்கவே.

     (இ-ள்.)   வாசத்தைப்போல்   -   வாசனைபோல, (அதாவது :
மலர்ந்த   புஷ்பமானது    மாய்ந்துபோனால்  அந்தப்  புஷ்பத்தினது
வாசனையானது   மறுபடி    உண்டாகி   மலர்கின்ற   புஷ்பத்திற்கு
வருவதுபோல்),   வரும் - முதற்  சமயத்தில் நகரத்தைச் சொன்னவன்
மாய்ந்துபோக   அந்த  வாசனையறிந்து  மோகாரத்தைச் சொல்பவன்
பிறக்கும்,   என்னின்  -  என்றால்,  மாமலர் - மலர்ந்த புஷ்பமானது,
நாசத்தைச் செலாத  முன் - நாசமடையாததற்கு  முன்னமே, நண்ணும்
- பக்கத்தில்  சேர்ந்திரா,  நின்ற, மொட்டிடை  -  மொக்கினிடத்தில்,
வாசத்தை - தனது   வாசனையைப்போன்ற   வாசனையை, வைத்து -
ஸ்தாபித்து,  பின் - பிறகு,   மாயு  மாறுபோல் - நாசமடைவதுபோல்,
பிறிதோடு  -  நூதனமாகப்  பிறக்கும்  வேறொருவனோடு, பேசிற்று -
பேசப்பட்டது,   உண்டோ  -  உண்டாகுமோ?,   நிற்க - இது நிற்க,
எ-று.                                                  (96)

 657. முற்கணத் துரைத்தவன் முடிந்த போழ்தினிற்
     பிற்கணத் துரைப்பவன் பிறக்கு மென்றலான்
     முற்கணத் தவனொடு பிற்க ணத்தவ
     னிற்குமென் றுரைத்திடி னித்த மாகுமே.