(இ-ள்.)
முற்கணத்து - அதீத ஸமயத்தில், உரைத்தவன் -
சொன்னவன், முடிந்த போழ்தினில் -
நாசமடைந்த போதே,
பிற்கணத்து - பவிஷ்யத் ஸமயத்தில், உரைப்பவன்
- அதறிந்து
சொல்பவன், பிறக்கும் - பிறப்பான்,
என்றலால் - என்று
சொல்வதினால், முற்கணத்தவனொடு -
ப்ரதஸமயவர்த்தியோடு,
பிற்கணத்தவன் - உத்தரஸமயவர்த்தியாபவன், நிற்குமென்று
-
நிற்பானென்று, உரைத்திடில் - சொல்லுமிடத்தில்,
நித்தமாகும் -
நித்தியமுமாகப்பட்டதாக நின்றது, எ-று.
(97)
658. நல்வினைச் செயநினைத் தான்செ யான்பினை
யவ்வினைச் செய்தவ னதன்ப யன்றுவா
னிவ்வகை யனித்தமே யென்று ரைப்பவர்
செய்யுநல் வினைகளும் பயனு மில்லையே.
(இ-ள்.) நல்வினை
- நன்மையாகிய புண்ணிய வினையை, செய
- முன் ஸமயத்தில் செய்ய வேண்டுமென்று,
நினைத்தான் -
நினைத்தவன், செயான் - அந்நல்வினையைச் செய்யமாட்டான், பினை
- பின் ஸமயத்தில், அவ்வினை - அப்புண்ணிய வினையை, செய்தவன்
- இயற்றியவன், அதன் பயன் - அப்புண்ணிய வினையின் பலனை,
துவான் - அனுபவிக்கமாட்டான், இவ்வகை - இந்தப் பிரகாரமாக,
அனித்தமே யென்று - ஸர்வதா அனித்தியமே தத்துவமாகுமென்று,
உரைப்பவர் - சொல்பவர்கள், செயும் - செய்கின்ற, நல்வினைகளும்
- புண்ணிய வினைகளும், பயனுமில்லை
- அவைகளின்
பலனுமில்லாமல் போகும், எ-று. (98)
659. மறித்தது விதுவென வுணரு மவ்வுணர்
வறக்கெடு மனித்தத்து ளில்லை யாமெனி
லறக்கெட வேற்றின விளக்கை யஃதெனு
மறித்துணர் வுணர்வதும் மயக்க மாகுமே.
(இ-ள்.) மறித்து
- திரும்பி, அது - அந்த வஸ்துவானது,
இதுவென - இதுதான் என்று, உணரும் -
அறியும்படியாகிய,
அவ்வுணர்வு - அந்தப் பிரத்திய பிஜ்ஞானமானது, அறக்கெடும்
-
ஸர்வதா நாசமடைகின்ற, அனித்தத்துள் - அனித்திய தத்துவத்தில்,
இல்லையாம் - இல்லாததாகும், எனில் - என்றால்,
அறக்கெட -
இருளானது பற்றற நீங்கும்படியாக, ஏற்றின - ஏற்றப்பட்ட, விளக்கை
- தீபத்தை, அஃதெனும் - அதுதானென்கின்ற, உணர்வு - அறிவால்,
மறித்து - திரும்பவும், உணர்வதும் - அறிகின்றதும், மயக்கமாகும் -
பிராந்தமாகும், எ-று.
(99)
660. தவ்வியந் தேசமே கால பாவமென்
றவ்வியம் பிடித்தந்த விளக்கி தென்றெழு |