மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 303


 

     மெவ்வகை யுங்கெடி னிதுவ தென்றெழு
     மவ்வது மிதுவென்பே ரறிவு மில்லையே.

     (இ-ள்.) தவ்வியம் - திரவியமும், தேசம் - க்ஷேத்திரமும், காலம்
- காலமும்,   பாவமென்று - அத்திரவ்யத்தினுடைய  பாவமும் என்று,
(இந்நான்கினால்),   அவ்வியம் - அழியாத  தன்மையாகிய த்ரௌவ்ய
யுக்த  தன்மையை,   பிடித்து - சேர்ந்து,   அந்த  விளக்கு - அந்தத்
தீபமானது,   இதென்று - இதுதானாகுமென்று, எழும் - உண்டாகின்ற,
(பிரத்தியபிஜ்ஞானமானது),    எவ்வகையும்   -   ஸர்வதா, கெடின் -
நாசமடைந்து அனித்தியமானால்,  எழும் - உண்டாகின்ற, அவ்வதும் -
இந்த   நிச்சய   ஸ்வரூபமும்,   இதுவின் பேர் - இப்பொருளினுடைய
பெயரும்,   அறிவும் - (இவற்றின் தன்மைகளை அறியும் சக்தியாகிய),
பிரத்தியபிஜ்ஞான   ஸ்வரூபமும்,  இல்லை - அத்தத்துவத்தாலில்லை,
எ.று.                                                  (100)

 661. அன்றுநாம் பிரிந்தன மடிக டாமிவ
     ரின்றுவந் தாரென வுரைத்தி யாவருஞ்
     சென்றறிந் திறைஞ்சுவ தெவ்வ றிவினா
     லொன்றுநின் றிடாவகை யுரைக்கு நூலினார்.

     (இ-ள்.)  ஒன்று  நின்றிடாவகை - ஸர்வதாவனித்யஸ்வரூபத்தை,
உரைக்கும்   -   சொல்லும்,  நூலினார் - சாஸ்திரத்தையுடையவர்கள்,
அன்று   -   அந்நாளில்,  நாம் - நாம், பிரிந்தனம் - இவரை விட்டு
நீங்கினோம்,   அடிகள்  தாம்  -  அந்தக்  குருக்கள் தாம், இவர் -
இவராகும்,   இன்று   -  இப்பொழுது,   வந்தார்  -   இவ்விடத்தில்
வந்தார்கள்,   என  -  என்று,   உரைத்து  -  சொல்லி,  யாவரும் -
எவர்களும், சென்று - அவரிடம் சென்று,  அறிந்து - அவர்தானென்று
அறிந்து,  இறைஞ்சுவது - வணங்குவதானது,   எவ்வறிவினால் - எந்த
ஞானத்தினால்?, எ-று.                                    (101)

வேறு.

 662. முன்னைக் கணத்தி னிறந்தவனும் முடிந்த கணத்து நின்றவனும்
     பின்னைக் கணத்துப் பிறப்பவனும் பிறிது பிறிதே யுறவில்லை
     யென்னிற் றடுமாற் றதுவில்லை யிவற்றைக் கொண்டு
                                        விடுமொருவன்
     றன்னைக் காணோ மாதலினுந் தடுமாற் றவர்க்குத் தடுமாற்றே.

     (இ-ள்.)  முன்னைக்கணத்தின்  - பூதசமயத்தில், இறந்தவனும் -
நாசமடைந்தவனும்,   முடிந்த   கணத்து  -  வர்த்தமான  சமயத்தில்,
நின்றவனும்   -   இருந்தவனும்,   பின்னைக்கணத்து  -   பவிஷ்யத்
ஸமயத்தில்,   பிறப்பவனும் - பிறக்கின்றவனும், பிறிது பிறிதே - வேறு
வேறே, உறவில்லை - ஒருவருக் கொருவர் பந்த