மில்லை, என்னில் -
என்று சொல்லுமிடத்தில், தடுமாற்றது -
ஸம்ஸாரமானது, இல்லை - உண்டாவதில்லை, இவற்றைக்கொண்டு -
இந்த ஸம்சாரத்தில் பிறந்து, விடும் -
கருமங்களை நீக்கிவிடும்,
ஒருவன் தன்னை - ஒரு நித்தியமான ஆத்மனை,
காணோம் -
அவ்வனித்ய தத்துவத்தில் காண்கிலோம், ஆதலின் - ஆகையினால்,
(இப்படி ஸர்வதாவநித்திய தத்துவஞ்
சொல்லுவர்களாகி),
தடுமாற்றவர்க்கு - இப்படித் தடுமாறப்பட்டவர்களுக்கு, தடுமாற்றே -
இச்சம்ஸாரப்பிரமணமே, (அதாவது : மோக்ஷமில்லை), எ-று.
உம் - அசை. (102)
663. தானஞ் சீலந் தவந்தருமந் தயாக்க டம்மாற் றடுமாற்றில்
வானின் மண்ணிற் பிறந்திறந்து வந்து வீடு பெறுமொருவன்
றானங் கிலனென் பாரவர்க்குத் தடுமாற் றறுத்து வீட்டினைப்பெற்
றானென் றால்சொற் பொருளின்றே லாரோ வீடு பெறுவாரே.
(இ-ள்.) தடுமாற்றில்
- இச்சம்ஸாரத்தில், தானம் - தானமும்,
சீலம் - சீலமும், தவம் - தபமும், தருமம் - தருமங்களும், தயாக்கள்
தம்மால் - ஜீவதயவு முதலாகிய காருண்யாதிகளாகிய
இவற்றால்
(அதாவது : தானஞ் செய்வதாலும், சீலாச்சாரத்திற் பொருந்துவதாலும்,
தவஞ்செய்தலாலும், தர்மங்களிற் பொருந்துவதாலும்,
ஜீவதயை
முதலியவற்றைச் செய்வதாலும்), வானில் -
தேவலோகத்திலும்,
மண்ணில் - பூமியிலும், பிறந்து இறந்து - தோன்றியும்
மறைந்தும்,
(அதாவது : தேவவுலகிற்றோன்றி அப்யுதபலனனுபவித்து நீங்கியும்,
மண்ணுலகில் மனுஷ்ய க்ஷேத்திரத்தில் தர்ம
கண்டங்களில்
உச்சைர்வம் சோத்பூத மனுஷ்யனா யவதரித்து நீங்கியும்), வந்து
-
தக்கபவரும் வந்து, வீடுபெறும் - கர்மக்ஷயஞ் செய்து முக்தியடையும்,
ஒருவன்தான் - ஒரு ஆத்மனானவன்தான், அங்கு
- அனான்ம
வாதமாகிய அந்த க்ஷணிகேகாந்த வாதவனித்திய தத்துவத்தில், இலன்
- இல்லாதவனாகும், என்பார் -
என்று க்ஷணவிநாசமும்
அனான்மையும் சொல்லுபவராகிய, அவர்க்கு
- அந்த
க்ஷணிகவாதிகட்கு, தடுமாற்று - இச்சம்சாரத்தை, அறுத்து - ஒருவன்
கெடுத்து, வீட்டினை - மோட்சத்தை, பெற்றான் -
அடைந்தான்,
என்றால் - என்று சொன்னால், சொல்ல - அப்படிப்பட்ட வசனம்,
பொருள் - தன்னால் குறிக்கப்பட்ட அவ்விதமான நித்யப்பொருள்,
இன்றேல் - அத்தத்துவத்தி வில்லையானால், (அந்த வசனத்திற்குப்
பொருள் இல்லையாகையால்), வீடுபெறுவார் - அத்தத்துவ வறிவால்
மோட்சமடைவோர்கள், யார் - எவர்கள்?,
(ஒருவருமடையார்),
எ-று. (103)
664. எல்லா வகையுங் கெட்டுள்ளத் தில்ல தந்தக் கணத்துதித்து
வல்லே வருமிச் சந்தானம் முடியுங் கணத்து வந்ததற்கோ
|