வெல்லா வகையு மின்றாய்வந்
தெய்து மதற்கோ வீடென்றா
னில்லா தந்தத் ததுபோத லியல்பே நின்ற வதற்கென்னில்.
(இ-ள்.) எல்லாவகையும்
- சமஸ்தவிதத்திலும், (ஸகல
விதாயங்களும்), கெட்டு - உள்ளஸ்கந்தம் வியமடைந்து, உள்ளத்து -
மனதில், இல்லது - இல்லாததாகியது, அந்தக்கணத்து
- அந்த
ஸமயத்திலேயே, உதித்து - உத்பவித்து, வல்லே
- சீக்கிரமாக,
(அதாவது : ஸமயம் ஸமயந்தோறும்),
வரும் - நூதனமாக
வரப்பட்டதாகிய, இச்சந்தானம் - இவ்வரிசையானது, முடியுங்கணத்து
- முடிவடையும் சமயத்தில், வந்ததற்கோ -
வரப்பட்டதற்கோ
(அல்லது), எல்லா வகையும் - ஸமஸ்த விதத்திலும்,
இன்றாய் -
இச்சந்தான சம்பந்தமின்றிப் பிரதமத்திலிருந்து இல்லாதனவாகி,
வந்தெய்துமதற்கோ - புதிதாய் வந்தடையப்பட்டதற்கோ,
வீடு -
மோக்ஷம், என்றால் - என்று கேட்குமிடத்தில், அந்தத்தது - சந்தான
அந்தியத்திலுள்ளது, நில்லாது - யாதொன்றும் நிலையில்லாமல்,
போதல் - நீங்கிவிநாசமாவதே, இயல்பு - ஸ்வபாவமாகும், நின்ற
-
பிறகு நூதனமாக வந்து நின்ற, அதற்கு
- அத்தத்துவத்திற்கு,
என்னில் - என்று சொல்லுமிடத்தில், எ-று.
இதுவும் பின்வரும் கவியும் குளகம்.
(104)
665. அந்தத் ததன்பின் வருங்கந்த மதற்கு வீடு தானாகில்
முந்தைக் கணங்கொ டவஞ்செய்து முடிந்தா ரென்ன பயன்பெற்றார்
சிந்தப் பில்லான் றவந்தன்னை யறியா னல்லோர் செறிவில் லான்
வந்தும் பரிந்தும் வீடெய்தும் பான்மைக் கிந்தப் பாழ்வீடே.
(இ-ள்.) அந்தத்ததன் -
சந்தானமுடிவின், பின் - பிறகு, வரும் -
வரப்பட்ட, கந்தமதற்கு -
கந்தத்திற்கு, வீடுதானாகில் -
மோக்ஷமென்றால், முந்தைக்கணங்கொள் -
அதீதஸமயங்களில்
கைக்கொள்ளும், தவம் - தவம் முதலானவைகளை, செய்து - செய்து,
முடிந்தார் - முடிந்தவர்கள், என்ன பயன் - என்ன பலத்தை, பெற்றார்
- அடைந்தார்கள், தவந்தன்னை - தபமுதலானவைகளை,
சிந்திப்பில்லான் - ஒன்றும் நினையாதவனும், அறியான்
- அதை
இன்ன தென்று நினைத்துச் செய்தறியாதவனும்,
நல்லோர்
செறிவில்லான் - நல்லோர் சேர்க்கையில்லாதவனும்,
வந்தும் -
கடைசியாக வந்தும், பரிந்து - பந்தங்களை நீங்கி,
வீடெய்தும் -
மோட்சமடையும், பான்மைக்கு - பக்குவத்திற்கு, இந்தப் பாழ்வீடே -
(ஒன்றுமில்லாது நாசமாதலே நிர்வாணமென்று சொல்லுகிற)
இந்தப்
பாழ்வீடே தகுதியாகும், எ-று.
ஸர்வதா அனித்தியமாதலால்
யாதொரு பொருளும் திறம்
இல்லை யென்பது இதனால் பெறப்படும். (105)
|