மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 307


 

          தோற்ற மீளுந் தோற்ற மீளப்
          பிறப்பு மீளும்     -     -     -     -     -
                                                (119 - 130.)

என்றதால்   காரணம்  கெடக்  காரியம்  கெட்டுச் சந்ததி  யொழிதல்
இயல்பென்பதும்,   இவ்வாறே   காரணமில்லாதொழித்துக் காரியத்தை
யழித்து   பவவிநாசஞ்   செய்வதே  வீட்டியல்பு என்பதும் விளங்கும்.

 666. இட்ட மாறும் விட்டுமேற்கோ ளழிந்து தன்சொன் மாறாகித்
     திட்ட மூன்றும் மறுதலைப்பத் தேறா தனித்த மென்பான்றன்
     சட்டர் கெட்டே போயிடுகத் தடுமாற் றறுத்து வீடெய்துஞ்
     சிட்டர் சொற்க தஞ்சித்தே யனித்த மென்பார் திருவறமே.

     (இ-ள்.) இட்டமாறும் - ஆறு இஷ்டங்களும், விட்டு - விடுபட்டு
விரோதமாகி, மேற்கோள் - அதன் மேற் சொல்லும்  திருஷ்டாந்தமும்,
அழிந்த  -   கெட்டு,   தன்   சொல் -  தனது வசனமும், மாறாகி -
மாறுபாடாகி,   திட்ட   மூன்றும்   -   திருஷ்டாந்தங்கள்  மூன்றும்,
மறுதலைப்ப   -   மாறுபாடாகவும்,   தேறாது    -    தெளியாமல்,
அனித்தமென்பான்   -   ஸர்வதா    அனித்தியமே  தத்துவமென்று
சொல்பவன்,  தன்  சட்டர் - தன்னுடைய மேன்மையானது,  கெட்டே
போயிடுக  - அத்தத்துவப் படி விநாசத்தையே அடைக, தடுமாற்று -
ஸம்சாரத்தை,   அறுத்து - கெடுத்து,  வீடெய்தும் - மோக்ஷமடையும்,
சிட்டர்   ஸ்ரீஷ்டர்களாகிய,   கதஞ்சித்து  -  ஒரு பிரகாரத்தினால்,
அனித்த   மென்பார்  -  பொருள் அனித்தியமென்று சொல்லபவரது,
சொல்   -   வசனமானது,   திரு  - அழகிய, அறம் - தருமமாகும்,
எ-று.                                                 (106)

வேறு.

667.வயிரமொன் றுடையன் வையத் துயிர்கண்மேன் மாயை மைந்தன்
     செயிர்விடத் தயாமுன் னோரா னறக்கெடு மனித்தஞ் சொன்னா
     னுயிரினை யில்லை யென்றா னூனினை யுண்க வென்றான்
     1பயிரினாற் கொலையுஞ் சொன்னான் முத்தியும் பாழென் றிட்டான்.

__________________________________________

     1கொல்லான்  புலால்  மறுக்க வேண்டியிருக்க ‘ஊனினைத்தின்க"
வென்றும்,   ‘கொல்லாதிருங்கள்"   என்றும்  சொன்னதால் - கோறல்
குற்றமென்பது   -   வசன    மாத்திரமே;   ஆகையால் "பயிரினாற்
கொலையும் சொன்னான்" என்றார் - ஆசிரியர்.

     உலகத்து ஜீவன்களின்மேல் அன்பு கூர்ந்து,  தயவால் அவர்கள்
துன்பம்   நீக்கித்   தருமவழி   காட்டுவதற்கே    புத்தன்  உலகில்
அவதரித்தான்    என்று   கொள்ளும்   மதத்திற்கு  மாறாக உயிரை
யில்லையென்றும் ஊனைத்தின்கவென்றும் சொன்ன