308மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.) மாயைமைந்தன் . மாயாதேவியின் புத்திரனாகிய புத்தன்,
வயிர   மொன்றுடையன்   -    சலஞ்    சாதித்த    லொன்றையே
மிகவுமுடையன், வையத்து - இவ்வுலகில், செயிர்விட - துன்பம்  நீங்க,
முன் - முன்னே,   உயிர்கள்   மேல்  தயா  - ஜீவன்களின்மேலுள்ள
தயவை,   ஓரான்  -  அறியான்,   அறக்கெடும் - ஸர்வதாநாசமாகும்,
அனித்தம்   -   அனித்தியத்தை    (அனித்தியம்),    சொன்னான் -
சொல்லினான்,     உயிரினை    -   ஜீவனை (அனான்மவாதத்தால்),
இல்லையென்றான்  -  இல்லையென்றுஞ்   சொன்னான்,  ஊனினை -
மாமிசத்தை,   உண்கவென்றான்  -  உண்ணுகவென்றுஞ் சொன்னான்,
பயிரினால் - (இவ்வாறு  கூறிய) பொருளற்ற சொற்களால், கொலையும்
- கொலையையும்,     சொன்னான்    -  சொல்லினான், முக்தியும் -
மோட்சமும்,    பாழென்றிட்டான்    -    ஸர்வதா  ஒன்றுமில்லாமல்
நாசமாதலென்றுஞ் சொன்னான், எ-று.

     பயிர் - பொருளற்ற மிருக கூச்சல்.                     (107)

அவாச்சியவாதம்

 668. அவாச்சிய மாதற் சொல்லாற் பொருளின்மே லறிவெ ழாமை
     அவாச்சிய மென்று சொல்லார் பொருளின்மே லறிவெ ழுந்த
     தவாச்சிய மென்று சொல்லாற் சொலப்படாப் பொருளு முண்டோ
     வவாச்சிய பக்கன் றன்சொன் மாறுமாய்க் கதஞ்சித் தாய்த்தே.

     (இ-ள்.)    அவாச்சியமாதல்   -   ஸர்வதா  அவாச்சியமாவது,
சொல்லால்   -  வசனத்தினால்,  பொருளின்மேல் - வஸ்துவின்மேல்,
அறிவு   -   ஞானமானது,   எழாமை    -    உண்டாகாமையாகும்,
பொருளின்மேல் - வஸ்துக்களின்மேல், அறிவு - ஞானம், எழுந்தது -
உண்டாகிச்        சொல்லப்பட்டதை,         அவாச்சியமென்று -
அவாச்சியமாகுமென்று,    சொல்லார்    -     சொல்லமாட்டார்கள்,
அவாச்சியமென்று   -   இது   அவாச்சியமே யென்று, சொல்லால் -
வசனத்தினால்,   சொலப்படா   -   சொல்ல முடியாத, பொருளும் -
திரவியமும்,    உண்டோ  -  இருக்கின்றதோ?, அவாச்சிய பக்கன் -
அவாச்சியமேவதத்துவமென்று       சொல்லுபவன்,     தன்சொல் -
தன்னுடைய   வசனமே,   மாறுமாய்  -  அவனுக்கு விரோதமுமாகி,
கதஞ்சித்தாய்த்து - கதஞ்சித் அவாச்சிய மென்றாயிற்று, எ-று.   (108)

___________________________________________

தால்  "மாயைமைந்தன்  வைரமொன்றுடையன்  வையத்துயிர்கண்மேல்
தயாமுன்னோரான்"   என்றுங்   கூறினார்   ஆசிரியர்.    பயிரினால்
என்பதற்கு விலங்கு நீர்மைகொண்டு என்று பொருள் கூறுவோருமுளர்.
பயிர்  -  விலங்கொலி.   ‘ஊனினை  உண்க",  என்பதில்  கொலைக்
குறிப்புக்    கரந்து    புலனாவதாலும்,    கொலையைக்     கரவாக
அறிவுறுத்துவதும் மக்கட்டன்மை   யிழந்த விலங்கு நீர்மையாகலானும்
‘பயிரினால்" என்றார்.