669. மதுரமென் றுரைத்த சொல்லான் மதுரந்தான்
வசிக்கப் பட்டு
மதுரத்தின் விகற்ப மெல்லாம் வைத்தறி வறிந்த
வண்ணம்
மதுரச்சொற் சொல்ல மாட்டா தாதலா லவாச்சி யம்மாம்
மதுரந்தான் மதுரச் சொல்லாற் சொலப்படும் சொலப்ப டாதாம்.
(இ-ள்.) மதுரமென்று
- மாதுரியமென்று, உரைத்த
-
சொல்லப்பட்ட, சொல்லால் -
வசனத்தால், மதுரந்தான் -
மாதுரியந்தான், வசிக்கப்பட்டு - வசிகரமாகிக்
கிரகிக்கப்பட்டு,
மதுரத்தின் - அத்தித்திப்பினுடைய,
விகற்பமெல்லாம் -
வித்தியாசமெல்லாம், வைத்து - ரஸநேந்திரியத்தில் வைத்து, அறிந்த
வண்ணம் - மனதறிந்த விதாயமாக, மதுரச்சொல் - மதுரமென்றசொல்,
(அந்தத் தித்திப்பினுடைய பேதவசனத்தால்), சொல்லமாட்டாதாதலால்
- சொல்ல முடியாதாகையால், அவாச்சியம்மாம் - அவாச்சியமாகும்,
மதுரந்தான் - அந்த மாதுரியந்தான்,
மதுரச்சொல்லால் -
மாதுரியமென்கிற சொல்லினால், சொலப்படும் - வசனிக்கவும் படும்,
சொலப்படாதாம் - தித்திப்பின் பேதப்படி சொல்ல முடியாததுமாகும்,
எ-று. (109)
670. வையத்து வார்த்தைக் கெல்லாம் வாச்சிய மில்லை யாகில்
பொய்யைத்தா முரைக்கின் றார்க ளாவரிப் பூத லத்தார்
மெய்யைத்தா னூலுஞ் சொல்லா துணர்வும்வே றாதல் வேண்டும்
வையத்து வழக்கு நூலோ டிவனுமா றாயி னானே.
(இ-ள்.) வையத்து
- இந்த வுலகத்தில் உண்டான,
வார்த்தைக்கெல்லாம் - வசனங்களுக்கெல்லாம்,
வாச்சியம் -
வசனத்தால் குறிக்கப்பட்ட பொருள், இல்லையாகில் - இல்லாவிட்டால்,
இப்பூதலத்தார் - இப்பூமியிலுள்ளவர்கள்,
பொய்யைத்தாம் -
அசத்தியத்தைத்தாம், உரைக்கின்றார்களாவர்
-
சொல்லப்பட்டவர்களாவார்கள், மெய்யைத்தான் -
ஸத்தியத்தை,
நூலும் - பரமாகமும், சொல்லாது - சொல்லமாட்டாது, உணர்வும் -
அறிவும், வேறாதல் வேண்டும் -
வேறாகிய தன்மையை
யடையவேண்டும், வையத்து - இவ்வுலகத்தில்,
வழக்கு -
வழங்குகின்ற தன்மையுடனும், நூலோடு
- ஆகம
சாஸ்திரத்தினுடனும், இவனும் -
இந்த அவாச்சியவாதியும்,
மாறாயினான் - மாறுபாடாகவானான், (அதாவது : லோக வழக்கு,
ஆகமம் இவைகளுக்கு விரோதமாயினான்), எ-று.
வாசகத்தால் குறிக்கப்படும்
பொருளாகிய வாச்சியமின்றாகில்,
வாசகம் பொய்யோ மேய்யோவென்று நிச்சயிக்கப்படாது; பொய்
மெய் என்பதற்கு வேறுபாடின்றாகும்; ஆகையால் அவ்விரண்டும்
இல்லாதுபோம்.
(110)
பின்னவரதம்
671. குணகுணி வேறே யென்னிற் கூடிய முடிவிற் றாகு
முணர்வொடு காட்சி யாதி யுயிரின்வே றுளவு மாகுங்
|