310மேருமந்தர புராணம்  


 

     குணகுணித் தன்மை யன்றிக் குழுவலும் பிரிவு மாகு
     முணாந்திடா துயிரி னிற்கு மொரோவழிக் குணியு மன்றாம்.

     (இ-ள்.)   குணகுணி  -   குணமும்  அந்தக் குணத்தையுடைய
பொருளும்,    வேறே   யென்னில்   -  ஸர்வதா பின்னமேவ என்று
சொல்லுமிடத்தில்,    கூடியமுடிவிற்றாகும்   -    வேறாகவிருந்துபின்
அவ்விரண்டு    மொன்றாகச்   சேர்ந்து    முடியப்   பட்டனவாகும்,
உணர்வொடு  -  ஞானத்தோடு,    காட்சியாதி - தர்சனம் முதலாகிய,
ஆத்ம  குணங்கள்,  உயிரின்  வேறுளவுமாகும்  - ஆத்மனை விட்டு
வேறிடத்திலிருப்பனவுமாகும், குணம் - குணங்கள், குணித்தன்மையன்றி
- அந்தப்    பொருள்களின்    ஸ்வரூபமல்லாமல்,     குழுவலும் -
வேறேயிடத்திலும்     கூடுவதும்,   பிரிவுமாகும் - பிறகு  அதனின்று
நீங்கிவிடுவதுமாகும்,    உயிரின்  - ஆத்மனிடத்தில், உணர்ந்திடாது -
(ஞானாதி   குணங்கள்   அல்லாத)   அசேதன  குணமும், நிற்கும் -
இருப்பதாகும்,  ஒரோவழி  - இவ்விதத்தால் பார்க்குமிடத்தல் ஒருவழி,
குணியும் - குணத்தையுடையதாகிய யாதொரு  பொருளும், அன்றாம் -
இல்லையென்றும் ஆகும், எ-று.

     உணர்ந்திடாதது  - என்பது, உணர்ந்திடாது எனத்தொகுத்தலாய்
வந்தது. (111)

 672. மயக்கமே செற்ற மார்வ மாம்பந்த கார ணங்க
     ளுயிர்ப்பரி ணாம மின்றி யொழியப்போய்க் கட்டும் வீடுங்
     கயக்கமி னிலையிற் றாகிக் கயத்திடைக் கல்லுப் போலாம்
     வியப்புறு தவத்தி னாலென் பெறுவது வேறென் பாரேல்.

     (இ-ள்.) வேறென்பாரேல்  - குணகுணிகள் ஸர்வதா பின்னமேவ
என்று   சொல்வார்களேயானால்,   மயக்கம்  - மோகமும், செற்றம் -
த்வேஷமும், ஆர்வம் - ஆசையும், ஆம் - ஆகிய, பந்த காரணங்கள்
- கர்ம பந்தத்துக்குக்  காரணமான  ராகத்வேவு மோஹங்கள், உயிர் -
ஆத்மனுடைய,   பரிணாமமின்றி   -  பரிணதகுணமில்லாமல், ஒழிய -
நீங்க,  கட்டும்  -  பந்தமும்,   வீடும் - மோட்சமும், போய் - நீங்கி,
கயக்கமில்        -        சோர்வில்லாத,        நிலையிற்றாகி -
நிலையினையுடையனவாய்,   கயத்திடை   -   குளத்திலிருக்கப்பட்ட,
கல்லுப்போல்  -  கல்லைப்போல,  ஆம் - ஆகும், (அப்படியிருக்க),
வியப்புறும் - விஸ்மய மடையும்படியான, தவத்தினால் - தபம் முதலிய
வைகள் செய்தலால்,   என் பெறுவது - பந்தமோட்சங்களில்லையாகில்
எதையடைவது (அடைவது ஒன்றுமில்லை), எ-று.              (112)

 673. உடம்பினு ளுயிரைப் போல குணகுணி யொன்றோ டொன்று
     விடும்படிக் கண்ட துண்டேல் வேறென விளம்ப லாகும்
     சடம்புரிந் துரைவே றாகப் பொருளும்வே றாமென் பானேல்
     மடந்தைபெண் மாதென் றாலும் மகளலாப் பொருளு முண்டோ.