(இ-ள்.)
உடம்பினுள் - சரீரத்துளாகிய, உயிரைப்போல் -
ஆத்மனைப்போல, குணகுணி - குணமும் அந்தக் குணத்தையுடைய
குணியும், ஒன்றோடொன்று - ஒன்றுடன் ஒன்று
(கூடியிருந்து),
விடும்படி - பிறகு ஒன்றை விட்டு ஒன்று நீங்கும்படியான தன்மையை,
கண்டதுண்டேல் - கண்டிருந்தால்,
வேறென - குணகுணிகள்
பின்னமேவ என்று, விளம்பலாகும் - சொல்லலாகும், (அப்படியின்றிக்
குணகுணிகள் தாதாத்மிய மாதலாலும், குணியைவிட்டுக்
குணம்
ப்ரதேசத்தால் வேறுபண்ண முடியாத தன்மை யுடையதாதலாலும்,
அதை ஸர்வதா பின்ன மேவ என்று
சொல்ல முடியாது;
அப்படியிருக்க), சடம்புரிந்து - அஞ்ஞானத்தைச் சேர்ந்து,
உரை
வேறாக - குணகுணி யென்று வசன மாத்திரத்தால் வேறேயிருக்க,
பொருளும் - அதற்குப் பொருளும், வேறாம்
- வேறாகிப்
பின்னமேயாகும், என்பானேல் - என்று சொல்லுவானேயானால்,
(ஒரு பெண்ணை), மடந்தை என்றாலும்
- மடந்தையென்று
சொன்னாலும், பெண் என்றாலும் - பெண்ணென்று சொன்னாலும்,
மாதென்றாலும் - மாது என்று
சொன்னாலும், மகளலா -
ஸ்த்ரீத்வமல்லாத, பொருளும் - வேறு வேறு வசனத்திற்கு
வேறு
வேறு பொருளும், உண்டோ - உண்டாயிருக்கின்றதோ? (இல்லை),
எ-று.
இதனால் திரவ்ய குணங்கள்
ஸர்வதா பின்னமல்ல வென்பது
பெறப்படும். ‘என்றலும்" என்பது மூன்றிடத்துங் கூட்டப்பட்டது. (113)
அபின்னவரதம்
674. எத்திறத் தாலு மொன்றே தத்துவ மென்று வேண்டும்
வித்தக நாவி னாரிற் குணகுணி விகற்பம் வேண்டார்
பித்தன்றன் னுணர்வு செய்கை சுகதுக்கம் பிறவு மொன்றாய்த்
தத்துவ மொழியு மாறும் வீடுந்தான் பாழ தாமே.
(இ-ள்.) எத்திறத்தாலும்
- எப்பிரகாரத்தினாலும், தத்துவம் -
தத்துவ ஸ்வரூபமானது, ஒன்றே யென்று - ஸர்வதா ஒன்றேயாமென்று,
வேண்டும் - இச்சித்தறிகின்ற, 1வித்தகம்
- ஞானத்தையுடைய,
நாவினாரில் - வித்துவான்களுக்குள்ளே, குணம் - குணத்தையும், குணி
- அக்குணத்தையுடைய திரவியத்தையும், விகற்பம் - முன் பின்னவாதி
கூறியதுபோல் வேறுவேறாக, வேண்டார் - விரும்பார்கள் (அதாவது :
எல்லா மொன்றேயென்று சாதிப்பர்),
பித்தன் தன் -
பைத்தியக்காரனுடைய, உணர்வு -
ஞானமானது, (அதாவது :
பித்தமயக்கத்தால் யதார்த்தமறியாமல் மயங்கி அறிவானது), செய்கை
- அஞ்ஞானக் கிருதத்தால், சுகதுக்கம் பிறவும்
- ஸுகதுக்காதிக
ளெல்லாம், ஒன்றாய் - ஒன்றாக (அதாவது
: ஸர்வதா ஒன்றாக),
தத்துவம் - தத்துவத்தை, மொழியுமாறும் - சொல்கின்ற
___________________________________________
1வித்தக
நாவினார்:- அபின்னம் சாதிக்கும் வாக்குச் சாமர்த்திய
முள்ளோர்; இஃதிழிவு குறித்துரைத்த சிறப்பு. |