312மேருமந்தர புராணம்  


 

மார்க்கமும்,   வீடும்தான்    -    மோட்ச  ஸ்வரூபமும், பாழாகும் -
நாசமாகின்றனவாகும், எ-று.                               (114)

675.ஒன்றென வுரைப்பான் கேட்பா னுணர்வு சொன் னான்கும் வேண்டா
     வொன்றெனி லொன்று மின்றா முளவெனி லொன்று மன்றா
     மென்றிடா நான்கும் வேண்டிப் பிராந்தியென் றுரைக்கும் போழ்து
     நின்றவை பிராந்தி யாக நிலைபெற்ற விகற்ப மெல்லாம்.

     (இ-ள்.) ஒன்றென - ஜீவாத்ம பரமாத்மாக்கள் ஸர்வதா ஒன்றாகி
அபின்னமேவ   தத்துவம்   என்று,   உரைப்பான்  - சொல்பவனும்,
கேட்பான் - அப்படிச்சொல்லும் தத்துவத்தைக் கேட்பவனும், உணர்வு
- அதை   அறியும்    ஞானமும்,    சொல்   -   அந்த   ஸர்வதா
அபின்னமென்கிற     வசனமும்,    (ஆகிய)   நான்கும் வேண்டா -
நான்கையும்   வெவ்வேறென்று    சொல்ல வேண்டாத, ஒன்றெனில் -
ஏகமாகி     அபின்னமென்று சொல்லுமிடத்தில், ஒன்றும் - சொல்வது
கேட்பது      முதலாகியவைகளில்     யாதொன்றும்,    இன்றாம் -
அத்தத்துவப்படி   வேறில்லாததாகும், (அது : பிரத்தியக்ஷ விரோதம்),
உளவெனில்   -   சொல்வது  கேட்பது  நினைப்பது முதலியவைகள்
உண்டென்றால்,   ஒன்றுமன்றாம்  -  ஸர்வதா அபின்னமே யென்னும்
தத்துவம் ஒன்றும்   இல்லாமற்போகும்,  என்றிடா - என்று யோசித்து,
நான்கும் வேண்டி  -  சொல்பவன்  கேட்பவன் அறிதல் அத்தத்துவம்
என்னும்   நான்கையுமிச்சித்து,  (இந்த   நூலும்)   பிராந்தியென்று -
பிராந்தமாகுமென்று,  உரைக்கும் போழ்தில் - அத்தத்துவ வாதிகளால்
சொல்லுமிடத்தில்,    நின்றவை - அப்படிச் சொல்லப்பட்டு நின்றவை,
பிராந்தியாக   -  மயக்கமாக, விகற்பமெல்லாம் - சொல்வது கேட்பது
முதலாகிய   வேறு    வேறு    தன்மைகளெல்லாம்,  நிலைபெற்ற -
நிலையையடைந்தனவாம், எ-று.

     இதனால்    கதஞ்சித்    பின்னமும்   பெறப்பட்டது  என்பது
தாத்பரியம்.                                             (115)

 676. ஒன்றென வுரைத்த மேற்கோ ளுடன்செல்லு மேது வோடு
     நின்றதோ ரெடுத்துக் காட்டு நின்றதன் பொருண்மு டிக்கி
     லொன்றென்ற மேற்கோள் தன்சொ லழிந்துமா றெய்தி யோடி
     நின்றவப் பக்கஞ் சேர்ந்தா னெறிபிறி தின்மை யாலே.

     (இ-ள்.)   ஒன்றென  வுரைத்த  - ஸர்வதா அபின்னமேயென்று
சொல்லப்பட்ட,  மேற்கோளுடன் - பிரதிஜ்ஞை அல்லது பக்கம் என்ற
கொள்கையுடன்,   செல்லும்   -  செல்லும்படியான, ஓர் ஏதுவோடு -
ஒருஹேது   காரணத்துடன்,  நின்றது - நின்றதான, எடுத்துக்காட்டு -
திருஷ்டாந்தம்,   நின்றதன்  -  அதன்  பின் நின்ற உபநயம் ஆகிய
இவைகளை   ஆதாரமாகக்    கொண்டு  இவற்றினுடைய (அதாவது :
இவற்றின் படி), பொருள் முடிக்கில் - (அந்த ஸர்வதா