மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 313


 

அபின்னமாகிய)  அர்த்தத்தை முடித்துத் தீர்மானித்தால், ஒன்றென்ற -
ஒன்றென்று  கூறிய   (அதாவது : அபின்னமேயென்ற), மேற்கோள் -
பிரதிஜ்ஞை   மேற்கொள்கையும்,    அழிந்து  - (ஏது திருஷ்டாந்தம்
உபநயம்   முதலிய   வேறு வேறாகிய அவயவங்கள் சாதித்ததுபற்றி)
கெட்டு, தன்சொல் - அந்த அபின்னவாதியின் வசனமே,  மாறெய்தி -
விரோதமாகி,   ஓடி   -    சென்று,   நெறி  - வழியானது, பிறிது -
வேறொன்றும்,    இன்மையால்     -     இல்லாமல்  ஏகாந்தமாய்த்
தடையாவதால்,  நின்ற - முன் பின்னமே தத்துவமென்று ஏகாந்தமாய்
நின்ற, அப்பக்கம் - அந்தப் பரபக்ஷத்தை, சேர்ந்தான் - அடைந்தான்,
எ-று.

     இங்ஙனம்    கூறியதனால்     ஏகாந்த    அபின்ன   பக்ஷம்
பக்ஷாபாஸமாகி, பரபக்கத்தோடு ஒன்றாய்விடும். பிரதிஜ்ஞை  அல்லது
பக்ஷம், ஹேது, திஷ்டாந்தம், உபநயம், நிகமனம் - இவை அநுகமான
பிரமாணத்தின்     அவயவங்கள்.   மேற்கோள்  அல்லது பக்ஷம் -
பின்வரும்    ஆதாரத்தைக்கொண்டு சாதிக்கப்படும். எல்லாமொன்றே
என்று வாதிப்போன் அனுமானப் பிரமாணத்தால் சாதிக்கவேண்டில் -
ஒன்றென்ற   கொள்கை    யழிந்து   (பலவான   அவயவங்களுள்ள
அனுமானத்தால்) பரபக்ஷம் சார்ந்து தன்பக்கம் குலையும்.       (116)

 677. ஒன்றென வுரைக்கு நூலை யோதுவா னொன்றன் றென்று
     நின்றநூ லோது வானோ டொத்திடும் வீடு மஃதே
     யன்றெனி லொன்றன் றாகு மாமெனி லளியற் றான்தா
     னொன்றென வுரைத்துப் பெற்ற வூதிய மென்கொ லோவே.

     (இ-ள்.)    ஒன்றென   -   ஜீவாதி    எல்லாத்திரவியங்களும்
பரமாத்மாவில்   ஸர்வதா   அபின்னமென்றும்,  (அதாவது : எல்லாம்
ஒன்றே   என்றும்), உரைக்கும் - சொல்கின்ற, நூலை - சாஸ்திரத்தை,
ஓதுவான் - சொல்பவன்,    ஒன்றன்றென்று - முன்ஸர்வதா பின்னமே
யென்று,    நின்ற - இராநின்ற, நூல் - சாஸ்திரத்தை, ஓதுவானோடு -
சொல்பவனோடு,    (இவனும்   அவனும்    அத்வைத     மதப்படி
ஒன்றேயாகையால்),   ஒத்திடும் - சமானமாவன், வீடும் - அவர்களால்
கூறப்பட்ட மோக்ஷமும்,  அஃதே - அவ்வாறே ஒத்திடும், அன்றெனில்
- அவ்வாறு   அவ்விருவரும்   ஒத்திடார் அவர்கள் சொல்லிய வீடும்
ஒத்திடாது  வேறு  வேறே    என்று   சொல்லும்பக்ஷத்தில், ஒன்று -
அத்துவைதவாதி கூறிய அபின்னமதம்,  அன்றாகும் - இல்லாதுபோம்,
ஆமெனில், அப்படி ஒன்றேயாமெனில்,   அளியற்றான்தான் - இந்தத்
தரித்திரன்,   (அதாவது : பொருளளிக்கும் திறமற்றோன்), ஒன்றென -
(பின்னவாதிக்கு   மாறாக   அபின்னவாதம்   பற்றி எல்லாம்) ஒன்றே
என்று,   உரைத்து   -   சொல்லி,   பெற்ற - அடைந்த, ஊதியம் -
இலாபம், என்கொல் - என்னவோ? (ஒன்றுமில்லை), எ-று.

     ஒ, வே - அசைகள்.                                (117)