678. ஒன்றென வுரைக்கும் மாரி தீவெயிற் கொதுங்கு
மோடித்
தின்றிடா மண்ணைச் சோறு தேடியே பசித்து றங்கு
மென்றிடா விரண்டு ரைக்கு மென்னைப்போல் பார்க்கி லெல்லா
மொன்றென வுரைக்கும் வாயே யுன்மத்தச் சரித மாய்த்தே.
(இ-ள்.)
(மேற்கூறியபடி ஒன்றென வுரைப்பவன்) ஒன்றென -
ஸர்வதா அபின்னமென்று, உரைக்கும் - சொல்வான்,
மாரிக்கு -
மழைக்கும், தீக்கு - அக்கினிக்கும், வெயிற்கு - வெயிலுக்கும், ஓடி -
நீங்கிச்சென்று, ஒதுங்கும் - மறைவான்,
(எல்லாம் ஒன்றானால்
ஏனப்படிச் செய்யவேண்டும்? வேண்டியதில்லை; அது பிரத்தியக்ஷ
விரோதம்; அதுவல்லாமலும்), மண்ணை - மண்ணை, தின்றிடா
-
தின்னாமல், சோறு - சோற்றை, தேடி
- சம்பாதித்து, (அது
கிடைப்பது அரிதானால்), பசித்து - பசியால் வருந்தி,
உறங்கும் -
தூங்குவான், (எல்லாம் ஒன்றானால் ஏன் அப்படி அலையவேண்டும்?
அதுவும் முன்சொன்னது போலவேயாகவேண்டும்), என்றிடா - என்று
இவைகளையெல்லாம் விவரமாகத் தெரிவித்து, இரண்டுரைக்கும்
-
கதஞ்சித்பின்னம் கதஞ்சித் அபின்னமென்று சொல்கின்ற
இரண்டு
வசனங்கட்கும் (உள்ளதை), என்னைப்போல் - என்னைப்
போல,
பார்க்கில் - பார்க்குமிடத்தில், எல்லாம் - யாவும் (எப்பிரகாரத்தாலும்),
ஒன்றென - அபின்னமே என்று, உரைக்கும் - சொல்கின்ற, வாயே -
வசனமானது, உன்மத்த சரிதமாய்த்து - மயங்கிய நடவடிக்கையாக
விராநின்றது, எ-று.
குவ்வுருபு மூன்றிடத்துங் கூட்டப்பட்டது.
(118)
வேறு.
679. விண்மதி யெண்ணிலா மண்ண கற்களி
னுண்ணிலா நீரகத் துருவு போலவுங்
கண்ணுறு கடந்தொறா காயம் போலவு
மெண்ணிலாக் காயத்து ளுயிறா மொன்றெனில்.
(இ-ள்.) எண்ணிலா
- கணக்கில்லாத (அதாவது
:
அஸங்கியாதமாகிய), மண் அகல்களின் - மட்பாத்திரங்களின், உள் -
உள்ளேயிருந்து, நிலா - பிரகாசிக்கும்படியான,
நீரகத்து -
ஜலத்தினுள்ளே, விண்மதி - ஆகாயத்திலிருக்கின்ற சந்திரனது, உருவு
போலவும் - ரூபம் போலவும், கண்ணுறு - கருதப்பட்டிருக்கிற,
கடந்தொறும் - பாத்திரங்கள் பாத்திரங்கள் தோறும், (தோன்றுகின்ற),
ஆகாயம் போலவும் - ஆகாயத்தைப் போலவும்,
எண்ணிலா -
கணக்கில்லாத, காயத்துள் - சரீரத்துக்குள், உயிரும் -
ஆத்மனும்,
ஒன்றெனில் - ஒன்றே யென்று சொல்லுமிடத்தில், எ-று. (119)
|