680. சாயைக்குத் தன்மைதா னெங்கு மொத்தபோ
லாயுநல் லறிவின்ப துன்ப மாதிகள்
காயத்து ளுயிர்களுக் கெங்கு மொத்திடி
லேயு மன்றியொன் றாதிவ் வெடுத்துரை.
(இ-ள்.) சாயைக்கு
- அந்தச் சந்திரனுைடைய சாயலுக்கு,
தன்மைதான் - ஸ்வபாவமானது, எங்கும் எவ்விடத்தும், (அதாவது :
ஜலமுள்ள எப்பாத்திரங்களிலும்), ஒத்தபோல் - வித்தியாசமில்லாமல்
ஒத்திருப்பது போல், காயத்துள் -
சரீரத்துளிருக்கப்பட்ட,
உயிர்களுக்கு - ஆன்மாக்களுக்கு, ஆயு - ஆயுஷ்யமும், நல் -
நன்மையாகிய, அறிவு - ஞானமும், இன்பம் -
சௌக்கியமும்,
துன்பமாதிகள் - துக்கம் முதலானவைகளும்,
எங்கும்
எவ்விடத்திலும், (அதாவது : எல்லாச் சரீரங்களிலும்), ஒத்திடில்
-
சமானமாயிருந்தால், இவ்வெடுத்துரை - இத்திருஷ்டாந்தம், ஏயும்
- இசையும், அன்றி - அப்படிக்கில்லாமல்,
(வித்தியாசமாக
விருப்பதால்), ஒன்றாது - பொருந்தாது, எ-று. (120)
வேறு.
681. கார்து ளும்புங் கடத்துறுந் தீமையா
லோர் துளும்புணர் லாதிக ளொத்தொவா
நீர்து ளும்பநின் றம்மதிச் சாயையின்
னேர்து ளும்புவ தெங்ஙன மென்றிடில்.
(இ-ள்.) கார்
- நீரானது, துளும்பும் - சிற்சில கடங்களில்
காற்றினால் அசையும், (அதனால்), கடத்துறும் -
சில கடங்களில்
மாத்திரம் அவ்வசைதல் ஏற்படும், (அதுபோல்),
ஓர் - ஒப்பற்ற,
தீமையால் - ஏதோ பொல்லாத
செய்கைகளால், துளும்ப -
ஒவ்வோரிடங்களி லசைதலால், உணர்வாதிகள் -
ஞான முதலிய
குணங்கள், ஒத்து - சிலவிடங்களில் பொருந்தியும்,
ஒவா -
சிலவிடங்களில் பொருந்தாதனவுமாகும், (என்னுமிடத்தில்),
நீர் -
ஜலமானது, துளும்ப - காற்றினாலசைய, நின்ற - ஆகாயத்திலிராநின்ற,
மதி - சந்திரனுடைய, சாயையின் - சாயலினது, ஏர் - அழகானது,
எங்ஙனம் - எவ்விதமாக, துளும்பும் - அசையும்?
(அசையாது),
என்றிடில் - என்று சொன்னால், எ-று.
துளும்புணர் என்பதில் அகரந்தொக்கது.
(121)
682. இன்ப துன்ப முயிர்க்கல யாக்கைய
வென்ப திந்த வெடுத்துரை யால்வரும்
முன்செய் புண்ணிய பாவ முடித்ததற்
பின்பி றத்த லிறத்தலு மில்லையே. |