316மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  இன்பம்  - சுகமும், துன்பம் - துக்கமும், உயிர்க்கல -
ஆத்மனுக்கில்லை,  யாக்கையவென்பது - சரீரத்தினுடையன வென்பது,
இந்த   எடுத்துரையால்  - இத்திருஷ்டாந்தத்தால், வரும் - வராநின்ற,
(ஆகையால்   யாதொரு    ஜீவனும்),   முன்   செய்  -  பூர்வத்தில்
செய்யப்பட்ட,     புண்ணியம்    -    புண்ணியத்தையோ, பாவம் -
பாவத்தையோ,  முடித்து - அனுபவித்துத் தீர்த்து, அதற்பின் - அதன்
பிறகு,  பிறத்தல் - மறுபடி பிறப்பதும், இறத்தலும் - மரணமடைவதும்,
இல்லை - இல்லை யாகும், எ-று.                           (122)

 683. வாரி மேன்மதி நிற்பவச் சாயைதான்
     நீரி னீங்குத லில்லையே னின்னுரை
     யோரு மோருயிர் நிற்ப வுடம்புயிர்
     பேர நீபிண மாகிப் பிழைத்ததே.

     (இ-ள்.)    வாரிமேல்   -   கடத்திலுள்ள   வச்சலத்தின்மேல்
ஆகாயத்தில்,  மதி - சந்திரன்,   நிற்ப - இருக்க,  அச்சாயைதான் -
அந்தச்    சந்திரச்சாயலானது,     நீரின்     -    ஜலத்தினின்றும்,
நீங்குதலில்லையேல்  -  நீங்கப்பட்டதில்லையானால்,    நின்னுரை -
ஸர்வதா அபின்னமே சொல்லுகிற உன்னுடைய வசனமானது, ஓரும் -
அறிகின்ற,   ஓருயிர்   -    சந்திரன்போல  பரமாத்மனென்கிற ஒரு
உயிரானது,    நிற்ப    - நீங்காமல் நிற்க, உடம்புயிர் - சரீரத்துள்ள
சந்திரசாயைபோன்ற    உயிரானது, போ - சரீரத்தினின்றும் நீங்க, நீ
பிணமாகி - நீயென்னும்    அச்சரீரம்    பிரேதமாகி,  பிழைத்தது -
உன்னாற் சொல்லிய தத்துவத்தினின்றும் பிசகியதாகும், எ-று.   (123)

 684. இந்துவுஞ் சாயையும் போலி ரண்டுயிர்
     நின்றன கண்டிலம் நிற்குங் காட்டிது
     வன்றியுஞ் சாயைபோ லாமி ரண்டுயிர்
     நின்றதுண் டாகிலும் நின்ற தில்லையே.

     (இ-ள்.) இந்துவும் - சந்திரனையும், சாயையும் - நீரில் தோற்றும்
அச்சந்திரனது   சாயலையும்,   போல்   -   போல,   இரண்டுயிர் -
இரண்டுயிர்கள், நின்றன - நின்றவைகளை, கண்டிலம் - பார்த்திலோம்,
இதுவன்றியும்   -  இது வல்லாமலும், சாயைபோல் - சாயலைப்போல,
ஆம்   -   இரண்டாகும்   படியான,  இரண்டுயிர் - இரண்டுயிர்கள்,
நின்றதுண்டாகிலும்    -    இருக்குமானாலும்,   நிற்கும்   -   உன்
திருஷ்டாந்தத்தால்         சாதிக்கப்பட்டிராநின்ற,        காட்டு -
தார்ஷ்டாந்தாகமாகிய      அபின்ன      தத்துவம், நின்றதில்லை -
நிலைக்கப்பட்டதில்லை, எ-று.                             (124)

வேறு.

 685. கடங்க டந்தொறா காயம தாயவா
     றுடம்பு டம்புதோ றாமுயி ரொன்றெனில்