கடந்த கர்ந்துழிக்
காய நிலைக்குமா
றுடம்பு டைந்துழி யும்முயிர் நிற்பதாம்.
(இ-ள்.) கடங்கடந்தொறும்
- கடங்கள் கடங்கள்தோறும்,
ஆகாயமது - ஆகாசமானது, ஆயவாறு
- ஆகியது போல்,
உடம்புடம்புதோறும் - எல்லாச் சரீரங்களிலும், ஆம் - உண்டாகின்ற,
உயிர் - உயிரானது, ஒன்றெனில் - ஒன்றேயென்று சொல்லுமிடத்தில்,
கடம் - கடமானது, தகர்ந்துழி - உடைந்த விடத்திலும்,
காயம் -
ஆகாயமானது, நிலைக்குமாறு - நிலைத்திருப்பது போல், உடம்பு -
சரீரம், உடைந்துழியும் - கெட்ட விடத்திலும், உயிர்
- உயிரானது,
நிற்பது - இருக்கவேண்டியதாக, ஆம் -
ஆகின்றது, (அது
பிரத்தியக்ஷத்திற்கு விரோதம்), எ-று. (125)
686. குடத்து ளுங்குட மின்றி யிருந்தமற்
றிடத்தி னுங்கவி னுக்கியல் பொத்தபோ
லுடம்பு ளுமுடம் பின்றி யிருந்தவெவ்
விடத்தி னுமுயி ரொத்திடல் வேண்டுமே.
(இ-ள்.) குடத்துளும்
- கடத்திலேயும், குடம் - கடமானது,
இன்றி - இல்லாமல், இருந்த - இருக்கப்பட்ட,
மற்றிடத்தினும் -
மற்றெவ்விடங்களிலும், கவினுக்கு -
ஆகாயத்திற்கு, இயல்பு -
ஸ்வபாவமானது, ஒத்தபோல் - ஒத்திருப்பதுபோல், உடம்புளும்
-
சரீரத்தினுள்ளும், உடம்பின்றியிருந்த - சரீரமில்லாமலிருக்கப்பட்ட,
எவ்விடத்தினும் - எவ்விடங்களிலும், உயிர் -
ஜீவன், ஒத்திடல்
வேண்டும் - சமானமா யிருக்கவேண்டும், எ-று. (126)
687. உடம்பி னோடு முயிர்த் தொழி லாலுயி
ருடம்பி னுண்மை யுணர்த்திடு மத்தொழி
லடங்க லும்மில் லாவழி யாருயிர்
தொடர்ந்து நின்றமை சொல்லுவ தென்கொலோ.
(இ-ள்.)
உடம்பினோடும் - சரீரத்தோடு கூடிய, உயிர் -
ஆத்மனுடைய, தொழிலால் - சேதனத்தொழிலால், உயிர் - ஆத்மன்,
உடம்பின் - சரீரத்தில், உண்மை - இருக்குந்தன்மையை, உணர்த்திடும்
- தெரிவிக்கும், அத்தொழில் - அச்சேதனத்தொழில், அடங்கலும்
-
முழுதிலும், இல்லாவழி - இல்லாவிடத்தில், ஆர் - நிறைந்திராநின்ற,
உயிர் - உயிரானது, தொடர்ந்து நின்றமை - எவ்விடங்களிலும் சேர்ந்து
நின்றதை, சொல்லுவது என்கொல் - எப்படிச் சொல்வது, எ-று.
ஓ - ஈற்றசை. (127)
|