318மேருமந்தர புராணம்  


 

 688. உடம்பு தானுயிர் போயது முண்டெனி
     னடந்த துன்னுரை ஞாலவி ரோதியா
     முடம்பு தன்னள வாயுட னின்றுபின்
     விடும்ப டித்துயி ரென்பது வீழ்ந்ததே.

     (இ-ள்.)  உடம்பு  தான் - சரீரமானது,  போய் - நீங்கிப்போகி,
உயிர்  அது  -  ஆத்மனானது,   உண்டெனில்  - இருக்குமேயாகில்,
உன்னுரை  -  உன்னாற்  சொல்லப்பட்ட ஆத்மன் ஒன்றே  யென்கிற
அபின்ன வாதம்,   நடந்தது - செல்வாக்கையடையப்பட்டது, (அப்படி
உடம்பு  நீங்கிய  உயிரை  யாவரும்  காண்பதில்லை;  உயிர் நீங்கிய
உடம்பு   அதாவது : பிரேதம்  உலகில்  யாவராலும்  திருஷ்ட சுருத
அனுபோகமாய்க் காணப்படுகின்றது; ஆகையால்), உயிர் - உயிரானது,
உடம்பு    தன்னளவாய்    -   சரீரப்பிரமாணமாய்,    உடனின்று -
சேர்ந்திருந்து,        பின்     -      பிறகு,       விடும்படித்து -
நீங்குந்தன்மையையுடையது,     என்பது   -  என்கிறலோக  வசனம்,
வீழ்ந்தது   -   உன்னுடைய ஒன்றே என்கிற அபின்ன  தத்துவத்தால்
கெடப்பட்டது,   (அதனால்   ஞாலவிரோதியாம்   ஸர்வதா ஆத்மன்
ஒன்றே   யென்கிற   அபின்னவாதம்   இவ்வுலகத்தில்  பிரத்தியட்ச
விரோதமாயிருக்கிறது), எ-று.                              (128)

 689. தத்து வம்மிது வெய்துவ தன்றெனி
     லொத்தொவ் வாமையை விட்டுயி ரொன்றுதான்
     சித்தி யெய்துவ தின்மையிற் சிந்தையான்
     முத்தி யெய்த முயலுவ தென்கொலோ.

     (இ-ள்.)    தத்துவம்    -     தத்துவஸ்வரூபமானது,   இது -
இத்தன்மையாக   ஜீவாத்மன் பரமாத்மன் இரண்டும் வேறல்லாததாகிய
ஒன்றே   யென்பதாகும்,   (வேறாக   நினைப்பது ப்ராந்தமாகையால்),
எய்துவது - ஜீவாத்மனை விட்டுப்போய்  அடையப்பட்ட வேறு வஸ்து
ஒன்று,     அன்றெனில்     -     அல்லவென்றால்,    (அதாவது :
ஸர்வபிரகாரத்தாலும்   இரண்டும் ஒன்றேயென்று சாதித்தால்), ஒத்து -
ஒரு   பிரகாரத்தால்    பொருந்தியும்,    ஒவ்வாமையை - மற்றொரு
பிரகாரத்தால்    பொருந்தாமையுமாகின்ற    தன்மையையும், விட்டு -
(இவைகளையெல்லாம்       யோசித்து      அவிரோதமாயறியாமல்)
மயங்கிவிட்டு,    உயிர்   -   இவ்வுலகத்தில்   உயிர், ஒன்றுதான் -
ஒன்றேதான்,     (வேறில்லையென்றால்),         சித்தியெய்துவது -
மோட்சமடைவது,   இன்மையில்   -  அத்தத்துவப்படியில்லாமையால்,
சிந்தையால்   -   தியானத்தால்,    முத்தியெய்த  - மோட்சமடைய,
முயல்வது    -    அத்தத்துவஞானிகள்   முயற்சி   செய்து   தவம்
முதலானவற்றைச்   செய்கின்றது,   என்கொல்  -  என்ன காரணம்?,
(அடையவேண்டிய   பலனில்லாமையால்   செய்யும் காரியம் வீணே),
எ-று.                                                 (129)