வேறு.
690. காட்சியை முடித்திடா காட்டியி வற்றைவிட்
டாட்சியா லொன்றெனி லந்தக னுக்கிருள்
மாட்சியாம் வையக மற்று னக்குமொன்
றாட்சியா லொன்றெனி லார்வி லக்குவார்.
(இ-ள்.) காட்சியை
- திருஷ்டத்தை (அதாவது : உலகில்
கண்டவையாகிய லோகப்ரவர்த்தி திருஷ்டம் புருஷப்ரவர்த்தி
திருஷ்டம் சாஸ்திரப் பிரவர்த்தி திருஷ்டம் என்கிறவற்றைக்கொண்டு),
முடித்திடா - விரோதமில்லாமல் முடித்து,
காட்டி -கதஞ்சித்
பின்னாபின்ன நிலைமைகளைக் காட்டியும், இவற்றை விட்டு - இந்தத்
தன்மைகளை யறியாமல் விட்டுவிட்டு, ஆட்சியால் - தான் கொண்ட
ஏகாந்தத் தன்மையின் உறுதியால், ஒன்றெனில்
- ஸர்வதா
ஒன்றேயென்றால், அந்தகனுக்கு - குருடனுக்கு,
வையகம் -
இவ்வுலகம், இருள்மாட்சியாம் - அந்தகாரமயமேயாகும்,
(அது
போல), உனக்கும் - (அபின்னமே ஸர்வதா சொல்லுகின்ற) உனக்கும்,
ஒன்றாட்சியால் - ஒன்றே உறுதியாகையால்,
ஆர் - எவர்கள்,
விலக்குவார் - அதை நீக்குவார்கள், (ஒருவராலும் நீக்க முடியாது),
எ-று. (130)
சூனியவாதம்
வேறு.
691. சுத்த சூனியந் தத்துவ மென்பவன்
சுத்த சூனிய மாகிலு நிற்கிலுஞ்
சுத்த சூனியந் தத்துவ மல்லதாஞ்
சுத்த சூனியந் தான்முத லல்லவோ.
(இ-ள்.) சுத்த
சூனியம் - ஸர்வதா சூன்யமேவ, தத்துவம் -
தத்துவமாகும், என்பவன் - என்று அத்தத்துவத்தைச் சொல்பவன்,
சுத்த சூனியமாகிலும் - ஸர்வதா சூனியமானாலும்,
நிற்கிலும் -
சூன்யமாகாமல் நின்றாலும், தத்துவம் - தத்துவமானது, சுத்த சூனியம்
- முழுதிலும் சூன்யம், அல்லதாம் - அல்லாததாகும், சுத்த சூனியம் -
அந்த ஸர்வதா சூன்யத்திற்கு, தான் - அச்சூன்யத்தைச் சொல்பவன்,
முதல் அல்லவோ - பிரதானமல்லவோ, (அவன்
சூன்யமானால்
அறிந்து சொல்லும் புருஷனில்லாததால் சூன்யவாதம் இல்லாதொழியும்;
அவன் நின்றால் சூன்யவாதம் பிரத்தியட்ச விரோதமாகும்), எ-று. (131)
692. சொன்ன சூனிய வாதியுஞ் சூனியம்
முன்ன மில்லதோ முன்னமுண் டாயதோ |