முன்ன மில்லதற் கென்மொழி தானிலை
பின்னை யில்லதற் கேபிழை யாயதே.
(இ-ள்.) சொன்ன
- ஸர்வ சூனியத்தைச் சொல்லிய,
சூனியவாதியும் - சூனியவாதியும், சூனியம் - சூனியமாகவேண்டும்,
(அதுவல்லாமலும் ஸர்வதா சூன்யமென்பது), முன்னமில்லதோ
-
முன்னாலேயே இல்லாததோ? (அல்லது), முன்னமுண்டாயதோ -
பூர்வத்திலிருக்கப்பட்டதோ, (என்று
கேட்குமிடத்தில்),
முன்னமில்லதற்கு - அனாதியாகவே இல்லாத
வஸ்துவுக்கு,
மொழிதான் - வசனந்தான், என் - என்ன இருக்கின்றது, இலை -
வசனமேயில்லை, பின்னையில்லதற்கு - முன்னாலிருந்து
பிறகு
இல்லையென்ற வஸ்துவுக்கு, பிழையாது -
ஸர்வ சூனியம்
தவறாகின்றது, எ-று. (132)
693. தோற்றம் வீதல் தொடர்ந்து நிலைபெற
லாற்ற வும்பொரு ளின்னிகழ் வாதலாற்
றோற்ற மாய்ந்திடல் சூனிய மென்றிடி
னேற்ற வாறுரைத் தானில்லை மற்றதே.
(இ-ள்.) தோற்றம்
- உத்பாதமும், வீதல் - வியமும், தொடர்ந்து
- இவைகளைச் சேர்ந்து, நிலைபெறல் - த்ரௌவ்ய யுத்தமுமாகிய,
(இந்த உத்பாதவியத் ரௌவ்ய யுக்தங்கள்), ஆற்றவும்
- மிகவும்,
பொருளின் - திரவியங்களினது, நிகழ்வாதலால் - நடத்தையாகையால்,
தோற்றம் - உத்பாதமும், மாய்ந்திடல் - வியமும், (இவைகளை ஒட்டி)
சூனியமென்றிடில் - தத்துவம் ஸர்வதா சூன்யமென்றால், மற்றது
-
மற்றதாகிய த்ரௌவ்ய தத்துவமானது, ஏற்றவாறு - இசையும் விதமாக,
உரைத்தானில்லை - சொன்னவனல்ல எ-று.
இதனால் உலகத்தில்
பிரத்தியட்ச விரோதமாகின்றதென்பது
பெறப்படும். (133)
694. இட்ட திட்ட மெறிந்து தன் கோளினை
விட்டு மாறெய்தித் தன்சொல் விரோதியா
கெட்ட வாறிவை தீநெறி கேளினி
மட்டு லாமுடி யாய்நல்ல வாநெறி.
(இ-ள்.) மட்டு -
மதுஜலமானது, உலாம் - வியாபித்திராநின்ற,
(பூமாலையையணிந்த), முடியாய் - முடியையுடைய கிரணவேகனே!,
இட்டம் - (ஆப்தேஷ்டம், ஆகமேஷ்டம், பிரத்திய பிஜ்ஞானேஷ்டம்,
கர்மபலஸம்பந்தேஷ்டம், ஸம்ஸாரேஷ்டம், மோட்சேஷ்டம், என்னும்)
ஆறு இஷ்டங்களையும், திட்டம் - (லோகப்ரவர்த்தி
திருஷ்டம்
புருஷப்ரவர்த்தி திருஷ்டம் ஸாஸ்திரப்ரவர்த்தி திருஷ்டம்) என்னும்
மூன்று திருஷ்டங்களையும், எறிந்து - கெடுத்து, தன்கோளினை
-
தனது |