மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 321


 

கொள்கையினையும்,     விட்டு     -     விட்டு,      மாறெய்தி -
மாறுபாட்டையடைந்து, தன்   சொல் - தனது வசனமே, விரோதியா -
எதிராக,    கெட்ட  -  கெடுமையான,     தீநெறி - பொல்லாங்கான
மார்க்கங்கள், இவை - (இந்தப்பிரகாரம், நித்தியமேவ, அனித்தியமேவ,
அவாச்சியமேவ,   பன்னமேவ,   அபின்னமேவ, சூன்யமேவ, என்கிற)
இவைகள், ஆறு - ஆறுவிதங்களாகும், இனி - இனிமேல், நல்லவாம் -
நன்மையாகிய, நெறி - ஸன்மார்க்கத்தை,  கேள் - கேட்பாயாக,(என்று
அரிச்சந்திர முனிவன் மேலும் சொல்லத் தொடங்கினான்,) எ-று.  (134)

ஸ்யாத் வாதம்

 695. உண்மை யில்லத னிற்குரை யும்மிலை
     யுண்மை யில்லத னிற்குணர் வும்மிலை
     யுண்மை யில்லத னிற்பய னும்மிலை
     யுண்மை யில்லதற் குண்மையு மில்லையே.

     (இ-ள்.)  (அவ்வாறு   சொல்லத்   தொடங்கிய  அம்முனிவன்),
உண்மையில்லதனிற்கு   -   ஸத்   ஸ்வரூபமில்லாததற்கு, உரையும் -
வசனமும்,    இலை    -     இல்லை,     உண்மையில்லதனிற்கு -
அஸந்தன்மைக்கு,    உணர்வும்    -    ஞானமும், இலை - இல்லை,
உண்மையில்லதனில்   -  உண்மையில்லாதவற்றில், பயனும் - பலனும்,
இலை  -  இல்லை,   உண்மையில்லதற்கு   - அசத்தான தன்மைக்கு,
உண்மையும் - ஸத்து தன்மையும், இல்லை - உண்டாவதில்லை,  எ-று.

     இக்கவியால்   சூன்யவாதத்தைக்    கண்டித்து     ஸன்மார்க்க
சம்மதமாகிய - ஸத் - என்பதைக் குறிப்பிட்டுக் கூறினார். ஸத்தென்பது
அஸ்தித்துவத்தைக்      குறிக்கின்றது.     ஸத்தே  பொருளென்பது
பெறப்பட்டது.    ஸத்தன்மை    தத்வார்த்த சூத்ரவியாக்கியானமாகிய
ஸுகபோதையில்     ஐந்தாவது     அத்தியாயத்தில்    தெளிவாகச்
சொல்லப்பட்டிருக்கிறது.                                 (135)

 696. அத்தி யன்வயத் தாலென்று நித்தமாஞ்
     சித்த மும்மொழி யுந்திரி வின்மையா
     னித்த மேவெதி ரேகத்த னித்தமாஞ்
     சித்த மும்மொழி யுஞ்சிதை வெய்தலால்.

     (இ-ள்.)    அத்தி    -    அஸ்திஸ்வரூபமாகிய   ஸத்தானது,
அன்வயத்தால்   -    அன்வயகுணத்தால்    (அதாவது :    நிச்சய
குணத்தினால்),   என்றும்   -    எப்பொழுதும்,  சித்தமும் - சத்தின்
அன்வய   குணத்தை   யுணரும்   மனமும், மொழியும் - சொல்லும்,
வசனமும்,      திரிவின்மையால்    -   கெடாமையால், (அதாவது :
அன்வயமாகிய நிச்சய குணத்தை அத்திரவியத்தைவிட்டு வேறு படுத்த
முடியாமையால்   அக்குணத்தால்   அந்த  ஸத்தை யறியும் மனமும்,
குறிக்கும் சொல்லும் திரிவெய்தாவாகையால்),