322மேருமந்தர புராணம்  


 

நித்தமாம்   -  ஸ்யாத்நித்திய  ஸ்வரூபமாகும்,  நித்தமே  -  அப்படி
நித்தியமான    வஸ்துவே,    வெதிரேகத்து    -   வைதர்மியமாகிய
குணத்தினால்,   சித்தமும் - மனதும்,   மொழியும் - வசனமும், சிதை
வெய்தலால்   -   கேடடைதலால், அனித்தமாம் - ஸ்யாத் அனித்திய
ஸ்வரூபமுமாகும், எ-று.

     இதனால்,   இப்படி    ஏகத்திரவியமே     அன்வயவ்யதிரேக
குணத்தினால் நித்தியானித்தியத்தை  அவிரோதமாகப் பெற்றிருக்கின்ற
தென்பது  பெறப்படும்.   இதுவும்  விரிவாக  ஸுகபோதை ஐந்தாவது
அத்தியாயத்தில்   சொல்லப்பட்டிருக்கிறது.    அஸ்திஸ்வரூபம், ஸத்
என்றும்    சொல்லப்படும்.    அது    உத்பாதவியத்     ரௌவ்ய
யுக்தமாகும்.                                           (136)

 697. அன்வ யம்வெதி ரேக மனந்தமத
     தன்மை யாற்பொரு டானிக ழும்படி
     சொன்னி கழ்ந்தத னைச்சொல்ல லில்லையத்
     தன்மை யாற்பொரு டானத வாச்சியம்.

    (இ-ள்.)  அன்வயம் - நிச்சய  குணமும்,  வெதிரேகம் - பரியாய
குணமும்,   அனந்தம்   -    முடிவில்லாததாகும், அத்தன்மையால் -
அந்தந்த   ஸ்வரூபத்தினால்,   பொருள் தான் - ஜீவாதி பொருள்கள்,
நிகழும்படி    -     ஸ்வபாவமாய்   நடக்கும்   பிரகாரம், சொல் -
வசனத்தினால்,   நிகழ்ந்ததனை - சாமான்யமாய்க் கூறப்பட்ட அந்தப்
பொருள்களின்   ஸ்வபாவ    பரபாவ    குண   பரியாயங்களையே,
சொல்லலில்லை - விசேஷித்துச் சொல்லல் முடியாது, அத்தன்மையால்
- அப்படிச்    சொல்லால்   கூறப்படாதனவாய்  அனந்தமாகிய குண
பரியாயங்களினால்,      பொருள்    -     ஜீவாதி    பொருள்கள்,
அவாச்சியமதானது      -    ஒரு    பிரகாரத்தால் ஸ்யாதவாச்சியம்
பெறப்பட்டது, எ-று.

     இதனால்      தத்துவமானது,     வாச்சியா      வாச்சியமும்
பெற்றிருக்கிறதென்பது பெறப்படும்.                         (137)

 698. அன்வ யம்வெதி ரேகமற் றப்பொருட்
     சொன்ன நல்லறி விற்பய னாதியிற்
     பின்ன மாதலிற் பின்னமு மாம்பொரு
     ளன்வ யம்வென் றலாதிய வற்றைச்சொல்.

    (இ-ள்.)  அப்பொருள் - அந்த  ஜீவாதி பொருள்கள், சொன்ன -
அததற்குச்   சொல்லப்பட்ட,    அன்வயம் - நிச்சயமாகிய தாதாத்மிய
குணமும்,    வெதிரேகம்    -     (ஸம்யோகஸம்பந்த,    ஸமவாய
ஸம்பந்தத்தினாலான) வெதிரிக்தமாகிய குணமும், (ஆகிய இவ்விரண்டு
வகைகளில்),    நல்   -  நன்மையாகிய அன்வயகுணத்தின், அறிவிற்
பயனாதியில்   -  ஞானாதிபலன் முதலானவைகளில், பின்னமாதலில் -