மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 323


 

(வெதிரேக  குணத்தின்  ஞானாதிபலன்  முதலானவைகள்)   வேறாக
விருப்பதால்,   பின்னமுமாம் - ஒரு பிரகாரத்தால் ஸ்யாத் பின்னமும்
பெறப்படும்,    பொருள் - ஜீவாதி பொருள்கள், அன்வயம் - நிச்சய
அன்வய குணம்,   வென்றலாதியவற்றை - ஜெயித்தல் முதலியவற்றை
(அதாவது : விபாவத்தை   விலக்கி   ஜயித்து   தனது ஸ்வபாவத்தில்
நிற்றல், முதலியவைகளை),   சொல்  - (இனி யான் கூறுகிறபடியறிந்து
பிறர்க்குச்) சொல்வாயாக, எ-று.                            (138)

 699. மாற்றி னின்றுபின் வீட்டினு நிற்குநல்
     லாற்றல் பற்றி யெழும்முணர் வன்வயம்
     மாற்றி னின்றது வீட்டிலில் லாமையால்
     வேற்று மையுணர் வாம்வெதி ரேகமே.

     (இ-ள்.)   மாற்றினின்று - (விபாவ  பரிணாமத்தால் பந்த முற்று)
ஸம்ஸாரத்தில்   நின்று, பின் - பிறகு, (சுத்தஸ்வபாவ பரிணாமத்தால்),
வீட்டினு   நிற்கும் - மோட்சத்திலும் நிற்கும், (இவ்விரண்டிடங்களிலும்
ஜீவனை விடாது பற்றி நிற்கும்), நல் - நன்மையாகிய, ஆற்றல் பற்றி -
சேதனாசக்தியைத்   தொடர்ந்து,   எழும்   -  எழுகின்ற, உணர்வு -
க்ஷாயிகஸம்மியக்துவ    ஞானாதிகள், அன்வயம் - ஜீவத்திரவியத்தின்
நிச்சயமாகிய   அன்வய    குணமாகும்,   மாற்றினின்று  -  (விபாவ
பரிணாமத்தால்  பந்தமறாமல்)   ஸம்ஸாரத்தில் மாத்திரமே யிராநின்று,
அது - அப்படி நின்ற  குணம்,  வீட்டிலில்லாமையால் - மோட்சத்தை
யடையும்போது   ஜீவனிடத்தில் நில்லாமையால், வேற்றுமையுணர்வு -
ஜீவனின்   விபாவ   பரிணாமமாகிய  ராகாதி அறிவுகள், வெதிரேகம்
ஆம் - ஜீவத்திரவியத்தினது ஸ்யதிரிக்த குணமாகும், எ-று.

     அன்வயவியதி      ரேக      குணங்களின்      ஸ்வபாவம்,
எப்பெற்றியதென்பது ஜீவத் திரவியத்தினால் உதாஹரிக்கப்பட்டது. (139)

அந்த அன்வயவ்யதிரேக குணத்தின் செயலைப்பற்றி லோகப்
பிரசித்தமாக ஒரு திருஷ்டாந்தத்தை யொருவாற்றாற்
காட்டி ஸமர்த்திக்கின்றார் ஆசிரியர்.

 700. அன்வ யம்வெதி ரேகத்தை யாக்கலா
      லின்ன வைபிறப் பாதியை யாக்கலால்
      பொன்னி னப்பொரு ணிற்ற லதன்பய
      னின்ன தொன்றையொன் றெய்தலு மொக்குமே.

     (இ-ள்.)    அன்வயம்   -   அன்வயமாகி   நின்ற   குணமே,
வெதிரேகத்தை - வ்யதிரிக்த  குணமாகிய  தன்மையை, ஆக்கலால் -
உபாதான காரணமாக நின்று