உண்டுபண்ணுவதால், இன்னவை -
இப்பேர்ப்பட்ட இக்குணங்களை,
பிறப்பாதியை, (நர, நாரக, திரியக், தேவ ராதி) பிறப்பினை, ஆக்கலால்
- உண்டுபண்ணுவதால், அதன் பயன் - அந்த அன்வய குணத்தின்
பலனானது, அப்பொருள் - அந்த ஜீவத்திரவியத்தினிடத்தில்,
பொன்னின் - ஸ்வர்ணத்தினிடத்தில், நிற்றல்
- அதன் பீதத்வாதி
அன்வயகுணங்கள் பிரிக்க முடியாது நிற்பதையும், அதன்பயன்
-
அந்த அன்வய குணத்தோடு பொருந்திய பொன்னே
உபாதான
காரணமாகி உண்டுபண்ணிய அதன் பலனாக, இன்னது
- இந்த
ஸ்வர்ணமானது, ஒன்றை ஒன்றெய்தலுமொக்கும் - கடகம் குண்டலமாய்
வேறு வேறு விதமாகி ஒன்றை யொன்றுபற்றி
வர்த்திப்பதையும்
நிகர்க்கும், எ-று.
ஜீவன் அன்வய குணங்களோடு பொருந்தி
உபாதான காரணமாக
வியதிரேக குணங்களைச் செய்து இது காரணம்பற்றிச் சதுர்க்கதிகளில்
வேறு வேறு ஜீவனாக நிகழ்வது, பொன்தன் அன்வய
குணம்
பொருந்தி உபாதானகாரணமாகிக் கடக குண்டலாதிகளாக மாறி மாறி
வர்த்திப்பதை யொக்கும் என்பது இதன் கருத்து. (140)
701. என்று மிக்குண மும்பொரு ளுந்தம்மு
ளொன்றை யொன்றுவிட் டோரியத் தின்கணுஞ்
சென்று நின்றன கண்டறி யாமையா
லொன்று மாம்பொரு ளோடு குணங்களே.
(இ-ள்.) என்றும்
- எப்பொழுதும், இக்குணமும் - இப்போது
சொல்லப்பட்ட இந்தக் குணங்களும்,
பொருளும் - இந்தக்
குணங்களையே பிரதானமாகவுடைய குணிகளாகிய
திரவியமும்,
தம்முள் - தங்களுக்குள், ஒன்றை யொன்று விட்டு
- ஒன்றினை
யொன்று நீங்கி (அதாவது : குணத்தை விட்டுக்குணியும் குணியை
விட்டுக்குணமும் நீங்கி), ஓரிடத்தின் கணும் -
வேறோரிடத்திலும்,
சென்று - போகி, நின்றன - நின்றவைகளை, கண்டறியாமையால் -
பார்த்தறியாமையால், பொருளோடு -
ஜீவாதிதிரவியங்களோடு,
குணங்கள் - ஞானாதிகுணங்கள்,
ஒன்றுமாம் - ஸ்யாத்
அபின்னமுமாகும், எ-று.
குண குணிகள் பிரதேசத்தால், வேறு
படுக்க முடியாவாகையால்,
வசன மாத்திரத்தால் வேறாயிருந்தும் பொருளால் அபின்னமே என்பது இதனால் பெறப்படும்.
(141)
702. அசேத னத்திடைச் சேதன மின்மையுஞ்
சேத னத்தில் சேதன மின்மையு
மோது மூர்த்திய மூர்த்தியொன் றன்மையுந்
தீதி லாதவச் சூனியஞ் செப்பினேன். |