மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 325


 

     (இ-ள்.)  அசேதனத்திடை  -  அசேதனத் திரவியத்தினிடத்தில்,
சேதனம்  -   சேதன   குணமானது,   இன்மையும் - இல்லாமைாகிய
சூன்யமும், சேதனத்தில் - சேதனத் திரவியத்தினிடத்தில், அசேதனம் -
அசேதன   குணம்,    இன்மையும்  -  இல்லாத சூன்யமும், ஓதும் -
சொல்லப்படுகின்ற, மூர்த்தி - மூர்த்தமாகிய ரூபித்திரவியத்தினிடத்தில்,
அமூர்த்தியொன்று   - அமூர்த்தமாகிய அரூபி குணம், அன்மையும் -
அல்லாத சூன்யமும்   (ஆகிய   விவைகளால்),   தீதிலாத - ஸர்வதா
கெடுதலில்லாத,    அச்சூன்யம்   -   அந்தச் சூன்யத்தை, (கதஞ்சித்
சூன்யமுமாகுமென்று),   செப்பினேன்   -   (பரமாகமத்தில் சொன்ன
தத்துவஸ்வரூபப்படி) சொன்னேன், எ-று.

    திரவியங்களின்    ஸகல   குணங்களையும்,  பரியாயங்களையும்,
பதார்த்தஸாரம்,     ப்ராப்ரதத்ரயம்      முதலிய     கிரந்தங்களில்
கண்டுகொள்க.                                          (142)

 703. சொன்ன வாறு விகற்ப மொருபொருட்
     டன்மை யிற்றலை வன்முத லாறுமா
     றின்மை யில்லிது மெய்ம்மை யிவற்றின்மேற்
     சொன்ன பங்கமு மேழுள சொல்லுவாம்.

     (இ-ள்.)  சொன்ன - சொல்லப்பட்ட, ஆறுவிகற்பம் - (நித்தியம்,
அனித்தியம்,   அவாச்சியம்,  பின்னம்,   அபின்னம், சூன்யமென்கிற)
ஆறுவிதங்களையும்,    ஒரு பொருள் தன்மையில் - ஒரே பொருளின்
தன்மையில்,    (அதாவது :   ஒவ்வொரு    திரவ்வியத்தினிடத்திலும்
உள்ளவையாகக்   கருதிப்பார்க்குமிடத்தில்),   தலைவன் முதலாறும் -
ஆப்தேஷ்டம்     முதலாகிய    ஆறு    இஷ்டங்களும்   (மூன்று
திருஷ்டங்களும்), மாறின்மையில் - வித்தியாசமடையாமையால்,  இது -
இந்த   ஆறும்,  (ஒரு பொருள் தன்மையென வறிவது),  மெய்ம்மை -
உண்மையான       ஸத்ஸ்வரூபமாகும்,    இவற்றின்மேல்  -  இந்த
ஆறுவிதத்தின்      மேற்பட்டும்,     (திரவியங்களின்     ஸர்வவிப்
பிரதிபத்திகளை     நிராகரித்து,  நிச்சயித்தறிய வேண்டி), சொன்ன -
ஸர்வஜ்ஞனாலருளிக் கூறப்பட்ட,   ஏழுள - ஏழாயிராநின்ற, பங்கமும்
- பிரமாண      ஸப்தபங்கி      நயத்தினையும்,    சொல்லுவாம் -
சொல்லுவோம், எ-று                                    (143)

வேறு.

 704. உண்மைநல் லின்மை யுண்மை யின்மையு முரைக்கொ ணாமை
     யுண்மைநல் லின்மை யுண்மை யின்மையோ டுரைக்கொ ணாமை
     நண்ணிய மூன்று மாக நயபங்க மேழு மொன்றிற்
     கண்ணுறி னன்ன யங்கள் கடாவிற்றீ நயங்கள் வேந்தே.

     (இ-ள்.)    வேந்தே - கிரணவேக   மகாராஜனே!, உண்மை -
ஸ்யாதஸ்தியும்,    நல் - நன்மையாகிய,   இன்மை - ஸ்யாநாஸ்தியும்,
உண்மையின்மையும் - ஸ்யாத