ஸ்திநாஸ்தியும், உரைக்கொணாமை - ஸ்யாதவக்தவ்வியமும்,
உண்மை
நல்லின்மை உண்மையின்மையோடு - ஸ்யாதஸ்தி
ஸ்யாநாஸ்தி
ஸ்யாதஸ்திநாஸ்தியாகிய இம்மூன்றினோடு, உரைக்கொணாமை
-
அவக்தவ்வியத்தம், நண்ணிய -
சேர்ந்த, மூன்றுமாக
(ஸ்யாஸ்தியவக்தவ்வியம் ஸ்யாநாஸ்தியவக்தவ்வியம் ஸ்யாதஸ்தி
நாஸ்தியவக்தவ்யம் என) மூன்றுமாக, நயபங்கமேழும்
- இந்த
சப்தபங்கி நயங்களை, ஒன்றில் - ஒரு பொருளிடத்தே, கண்ணுறில் -
கருதிப்பார்க்குமிடத்தில், நன்னயங்கள் - ஸன்மார்க்க நயங்களாகும்,
கடாவில் - வேறு வேறாக (அதாவது : அஸ்தியேவதிரவியம்
நாஸ்தியேவ திரவியம் என்று கருதுமிடத்தில்),
தீநயங்கள் -
மித்தியாநயங்களாகும், எ-று. (144)
705. உண்டெனப் பட்ட தற்கே யில்லையா முருவ மின்றே
லுண்டெனப் பட்ட வொன்றே யாமிந்த வுலக மெல்லா
முண்டெனப் பட்ட தற்கே யில்லையா மாறென் னென்னில்
வண்டுணுங் கோதை யாவாள் மகளிலா வுருவ மன்றோ.
(இ-ள்.) உண்டெனப்பட்டதற்கு
- அஸ்தி யென்று சொல்லப்பட்ட
பொருளுக்கு, இல்லையாமுருவம் - நாஸ்தி யென்கிற
ரூபமானது,
இன்றேல் - இல்லாமற் போகுமானால், இந்த
வுலகமெல்லாம் -
இந்தலோக முழுமையும், உண்டெனப்பட்ட -
அஸ்தியென்று
சொல்லப்பட்ட, ஒன்றே - ஒரு பொருளே,
ஆம் - ஆகும்,
உண்டெனப்பட்டதற்கு - அஸ்தி யென்று சொல்லப்பட்ட வஸ்துவுக்கு,
இல்லையாமாறு - நாஸ்தி யென்கிற ஸ்வரூபமானது, என்னெனில் -
எப்படி யென்றால், வண்டுணும் - வண்டுகளானவை மதுவையுண்ணும்,
கோதையாவாள் - பூமாலையை யணியப்பெற்ற பெண்சாதியானவள்
(அதாவது : மனைவியானவள்), மகளிலா -
அப்புருஷனுக்குப்
புத்திரியாயில்லாத (அதாவது : குமாரத்தயாகாத), உருவமன்றோ
-
ரூபமல்லவோ, எ-று.
பெண்சாதியானவள் புத்திரி
அல்ல வென்று ஒரு பொருளுக்கு
அஸ்தி நாஸ்திகள் ஏற்பட்டன என்பது இதனாற் பெறப்படும்.
(145)
706. அத்தியாங் கும்ப மென்றா லுலகெலா மடைய வாமோ
வைத்ததன் னிடத்த தாமோ மற்றந்தக் கும்ப மென்றால்
வைத்ததன் னிடத்த தென்னின் மற்றெங்கு மிலாமை
யாலே
நத்தியு முடைத்தன் றாகி லுலகநற் கும்ப மாமே.
(இ-ள்.) கும்பம்
- கடமானது. அத்தியாம் - அஸ்திஸ்வரூபம்
ஆகும், என்றால் - என்று சொன்னால்,
உலகெலாமடைய -
லோகமுழுமையு மெவ்விடங்களிலும், ஆமோ - ஆகுமோ, மற்று -
பின்னர், அந்தக் கும்பம் - அந்தக் கும்பமானது, வைத்த - தன்னை
வைக்கப்பட்ட, தன் இடத்ததென்னில் - தன் |