மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 327


 

னுடைய   ஸ்வக்ஷேத்திரத்தை  மாத்திரமுடையதென்றால்,   வைத்த -
அவ்வாறு தன்னை  வைத்த, தன்னிடத்தாமோ - தன்னிடமாகிய அந்த
ஸ்வக்ஷேத்திரத்திலே   மாத்திரமுள்ளதாகுமோ,   என்றால்  -  என்று
வினவுமிடத்து,   மற்றெங்கும்  -  தானிரா நின்ற ஸ்வேக்ஷத்திரந்தவிர
பரக்ஷேத்திரத்   தெவ்விடங்களிலும்,  இல்லாமையால் - இல்லாததால்,
நத்தியுமுடைத்து  - அந்தக் கும்பத்திற்குப்  பரக்ஷேத்திராபேக்ஷையால்
நாஸ்தியென்கிற     பதமும்         உளது,         அன்றாகில் -
அப்படிக்கில்லாவிட்டால்,    உலகம்   -   இந்தலோக  முழுமையும்,
நற்கும்பமாம் - நன்மையாகிய ஒரே கும்பமயமாயும் விடும், எ-று.

     இதனால்             ஒவ்வொரு            பொருளுக்கும்
ஸ்வத்திரவ்யஸ்வக்ஷேத்ரஸ்வகால   ஸ்வபாவத்தால்  அஸ்தித்துவமும்,
பரதிரவிய   பரக்ஷேத்ரபரகால   பரபாவத்தால்,     நாஸ்தித்துவமும்
ஏற்படுகின்றனவென்பது    பெறப்படும்.   இதையே  வரும்பாடலிலும்
சொல்லுகின்றார் ஆசிரியர்.                                (146)

 707. இதுவது வலாமை யுண்டே லிதுவது வென்ன லாகு
     மிதுவது வலாமை யின்றே லிதுவது விலாமை யாலே
     பொதுவொடு விசேட மின்றிப் போம்பொருள் போன பின்னை
     விதிவிலக் கிலாமை யாலே சூனிய மாகும் வேந்தே.

     (இ-ள்.)  வேந்தே  -  அரசனே!,  இது - இது  என்று  சுட்டிக்
காட்டப்பட்ட   ஒரு  அஸ்தியான வஸ்துவுக்கு, அது வலாமை - அது
என்று   காட்டப்பட்ட  வேறு   பொருளின்  தன்மையில்லாது நாஸ்தி
யென்கிற   பங்கு,  உண்டேல்  -  இருக்குமானால், (இதனை), இது -
இந்த  வஸ்து, அது - அந்தவஸ்து, என்னலாகும் - என்று குணமறிந்து
சொல்லமுடியும்,  (அப்படிக்கில்லாமல்)   இது  - இந்தப் பொருளுக்கு,
அது   வலாமை  -   அந்த  வேறு பொருளல்லாத நாஸ்தித் தன்மை,
இன்றேல் -  இல்லாமல்  போனால்,  இது - இந்தப் பொருள், அது -
அந்தப் பொருள், (என்னும் வித்தியாசமாகிய அஸ்திநாஸ்தி குணங்கள்),
இலாமையால் - இல்லாமல் நாஸ்தியாவதால், (அப்போது) பொதுவொடு
- ஒவ்வொரு பொருளின்  ஸாமான்ய   குணத்தோடு,  விசேடமின்றி -
வேறுவேறாகிய விசேஷ  குணமுமில்லாமல், பொருள் - பொருளானது,
போம்  -  கெட்டுப்போகும், போன பின்னை - அப்படிக்கெட்டபிறகு,
விதி - பொருள் உண்டென்று விதித்தலும், விலக்கு - இல்லை யென்று
பிரதிஷேதித்தலும்,  இலாமையாலே   -   இல்லாததாலே, (அதாவது :
சொல்ல   முடியாததாலே), சூனியமாகும்  -  ஒன்றுமில்லாமற்போகும்,
எ-று.                                                 (147)

  708. அத்தியா லத்தி சீவ னறிவினா லறிவ னென்னி
      லத்திமா றாய வெல்லாக் குணத்தையு மடையப் பற்றி
      னத்தியாம் பங்கந் தோன்றிச் சீவனை நாத்தி யென்னு
      மித்திறப் பங்க மேழும் பொருளிடை யிருந்த வாறே.