மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 329


 

     (இ-ள்.)  வேந்தே   -  கிரணவேக  மகாராஜனே!,  செப்பிய -
இப்பொழுது   சொல்லப்பட்ட,   பங்கமேழும் - ஸப்தபங்கிகள் ஏழும்,
வத்துக்கள்   தோறும்   -  ஜீவாதி பொருள்கள் தோறும், செல்லும் -
சேர்ந்திருக்கின்றனவாகும்,   இப்படி    -    இந்தப்      பிரகாரம்,
உரைத்தவெல்லாம்    -     சொல்லப்பட்டவைகளை     யெல்லாம்,
ஏவகாரத்தோடு   -    தனித்தனியாகவே, (அஸ்தியேவ, நாஸ்தியேவ,
என்று), ஒன்றில்   -   பொருந்தினால்,    தப்பி - (திரவ்வியபிரமாண
நிச்சயங்கள்)    கெட்டு,    தீநயங்களாகி    -  மித்தியாநயங்களாகி,
தடுமாற்றந்தன்னை   -   சம்சாரத்தில் தடுமாற்றந்தன்னை, ஆக்கும் -
செய்விக்கும்,   மெய்ப்பட  -   உண்மையாக, உணர்ந்த போழ்தின் -
அறிந்த   காலத்தில்,   வீட்டினை  -    மோட்சத்தை, விளைக்கும் -
உண்டுபண்ணும், எ-று.

     வஸ்து   யாதாத்மிய   மறியாமையால்   பந்தமே யாகுமென்பது
இதன்கருத்து.                                           (150)

 711. அனாதிமிச் சோத யத்தா லறிவுமிச் சத்த மாகிக்
     கனாவினும் மெய்ம்மை காணார் பான்மையாங் காலம் வந்தால்
     வினாவிமெய் யுணர்ந்த வற்றி னெழுந்தநல் விசோதி தன்னா
     லனாதிமிச் சுவச மத்தா லடையுஞ்சம் மத்தம் வேந்தே.

     (இ-ள்.)   வேந்தே   -    கிரணவேக   அரசனே!, அனாதி -
அனாதியாகவே, மிச்சு - மித்தியாத்துவ கர்மத்தினுடைய, உதயத்தால் -
உதயத்தினால்,   அறிவு     -     ஞானமானது,     மிச்சத்தமாகி -
மித்தியாத்துவமாகி (அதாவது கலங்கி, ஸ்வரூபம் மறைந்து), கனாவினும்
- சொப்பனத்திலும்,     மெய்ம்மை    -    உண்மையை (அதாவது :
யதாத்மியத்தை),   காணார்   -   அறியாதவர்கள்,  பான்மை ஆம் -
பான்மையாகிற, காலம் வந்தால் - காலமானது வந்தால், (அப்பொழுது),
வினாவி - ஒருவரைக்  கேட்டு, மெய்யுணர்ந்து - உண்மையை யறிந்து,
அவற்றின் - அவற்றினால்,  எழுந்த உண்டாகிய, நல் - நன்மையாகிய,
விசோதி   தன்னால்   -   க்ஷயோபசம    லப்தியினால்,  அனாதி -
அனாதியாக   பந்தித்துவராநின்ற,  மிச்சு - மித்தியாத்துவப் பிரகிருதி,
உவசமத்தால்  -  உபசமபாவத்தால், சம்மத்தம் - ஸம்மியக்துவமானது,
அடையும் - ஆத்மனிடத்திற் சேரும், எ-று.

     ‘உணர்ந்த போழ்தினெழுந்த" என்று வேறுபாடமுண்டு.      (151)

 712. எழுபது கோடா கோடி சாகரத் திழிந்து நின்ற
     பழுதெலாஞ் செய்ய வல்ல மிச்சத்தப் பகடி தன்னை
     யழியவே சார்ந்த கோடா கோடிமே லந்த மூழ்த்த
     மொழியமேற் றிதியைச் சோதி சாம்வண்ண மொருங்கு வீழ்க்கும்.

     (இ-ள்.)     எழுபது      கோடாகோடி       சாகரத்து   -
உத்கிருஷ்டஸ்திதியில்  எழுபது கோடாகோடி கடலில், இழிந்து நின்ற
- குறைந்து நின்றதாகிய, பழு