வைசயந்தன் முத்திச்சருக்கம் 33


 

 70. வீட்டி னின்றது வெவ்வினை யெண்மையின்
    கேட்டி லெண்குண மெய்தியோர் கேடிலா
    மாட்சி யாலுல கந்தொழ மாற்றற
    வோட்டி வைத்தசெம் பொன்னொத் தொளிருமே.

          (இ-ள்)       வீட்டினின்றது     -      மோட்சஜீவன்,
வெவ்வினையெண்மையின்     -   தீயனவாகிய     ஞானாவரணாதி
அஷ்டகர்மங்களின்,   கேட்டில்   -   கெடுகையினாலே   (அதாவது
கர்மரஹிதத்வத்தினால்),   எண்குணமெய்தி  - அனந்தஞானமுதலாகிய
அஷ்டகுணங்களை  யடைந்து,  ஓர்  கேடிலா  -  எக்காலமும்  ஒரு
கெடுதியுமில்லாத,   மாட்சிமையால்.   பெருமையினாலே,   உலகம் -
உலகத்திலுள்ள  பவ்வியப் பிராணிகள்,  தொழ - வணங்க,  மாற்றற -
களங்கமற,     ஓட்டிவைத்த   -    புடம்போட்டுக்களங்கம்   நீக்கி
வைக்கப்பட்ட,  செம் - சிவந்த,  பொன்னொத்து -  ஸ்வர்ணத்துக்குச்
சமானமாகி, ஒளிரும் - தன்னிலையில் பிரகாசிப்பதாகும், எ-று.    (70)

 71. மாற்றி னின்றது வையக மூன்றினு
    மாற்ற வும்பரி யட்டமோ ரைந்தினாற்
    றோற்றம் வீத றொடர்ந்திடை யில்வினைக்
    காற்றி னாற்கதி நான்கிற் சுழலுமே.

     (இ-ள்.)  மாற்றில் நின்றது - (முன் சொல்லியதற்கு) மாற்றமாகிய
ஸம்ஸார  நெறியில்  நின்ற  ஸம்ஸார   ஜீவன்,  வையகமூன்றினும் -
மூன்றுலோகத்திலும்,  ஆற்றவும் - மிகவும்,  பரியட்ட மோரைந்தினால்
-  (திரவிய,   க்ஷேத்திர,   கால,   ஹாவ   பவமென்னும்)  பஞ்சபரி
வர்த்தனைகளினால், தோற்றம் - பிறத்தலும், வீதல் - சாவதும் (ஆகிய
இவைகளை),   தொடர்ந்து  -  சேர்ந்து,   இடையில்   -  மத்தியில்,
வினைக்காற்றினால்  -   கருமங்களாகிற  காற்றினால், கதிநான்கில் -
(நாரக, திரியக், மனுஷ்ய, தேவ என்னும்)  நாலு கதிகளிலும், சுழலும் -
சுழலா நிற்கும், எ-று.

     பரிவர்த்தனைகளின்      விவரங்களைப்     பதார்த்தசாரத்தில்
முப்பதாவது அதிகாரத்தில் பார்த்துக்கொள்க.                  (71)

 72. மானு டம்பு விடாகதி நான்கெய்து
    மீன மில்விலங் கிலுமோர் நான்கெய்தும்
    வானின் வந்து விலங்கு மனிதனா
    மீன மில்லவை யெய்திடு நாரகன்.

     (இ-ள்.)  மானுடம்பு - மனுஷ்ய சரீரத்தை உடைய ஜீவன், விடா
-  அந்தச்   சரீரத்தைவிட்டு,   கதிநான்கு   -   நாலு   கதிகளிலும்,
(எதிலானாலும்   தனது  பரிணாமத்தின்படி  தன்  தன் பாவத்தினால்),
எய்தும் - அடையும், ஈனமில் - குறை