மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 333


 

செய்யா  -   செய்து,   குணத்தச்  சேடியுடனின்று - குணஸ்ரீணியில்
ஆரோஹணமாக  நின்று,  நிக்கேவந்தன்னை - குணநிக்ஷேபத்தையும்,
ஆக்கா   -   செய்து,    என்றும் - அப்பரிணாமத்தால் எந்நேரமும்,
வினைகட்கு - கருமங்களுக்கு, குன்றிய - குறைவையடைந்த, குணந்தை
சங்கமத்தை - மேலும் மேலும் ஸம்மியக்குண ஸங்கிரமணத்தையும்,
செய்யா - செய்து, (அதுவன்றியும்), எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளோடு தொடரும்.               (157)

 718. அணியட்டி கரணம் பின்னை யந்தரக் கரணஞ் செய்யா
     விதியந்தக் கோடா கோடி மூழ்த்தமேல் கீழ்முன் னின்ற
     தனைவிட்டு நடுவ ணந்த மூழ்த்தமாய் நிடேதித் தன்கண்
     வினையினைக் கீழு மேலு மந்தர வெளியைச் செய்யா.

     (இ-ள்.)  அணியட்டி  கரணம்   -   அந்த அநிவிர்த்தி கரண
பரிணாமமாது,   பின்னை  - தனது காலமாகிய ஒரு அந்தர் முகூர்த்த
காலத்தின்  பிறகு  அந்தியத்தில்,  அந்தரக்கரணம் - அந்தரக்கரணம்
என்னும் ஒரு தன்மையை, செய்யா - செய்து, (அவ்வந்தரக்கரணமான),
விதி   -   (முன்    விசோதிலப்தியில்)   விதிக்கிரமத்தால்,  மேல் -
(மித்தியாத்துவ    கருமத்தின்)   உத்கிருஷ்ட  ஸ்திதியையும், அந்தக்
கோடா   கோடி   மூழ்த்தம்    -   அந்தக்  கோடாகோடி  அந்தர்
முகூர்த்தமாகிய,   நடுவண் - மத்தி மஸ்திதியாகிய, முன்னின்றதனை -
முன்னால்   நிற்கப்பட்டவந்    நிலையையும்,   கீழ்  -    ஜகன்னிய
ஸ்திதியாகிய,  அந்த மூழ்த்தமாய் - அந்தர் முகூர்த்தமாக, நிடேதித்து
- நிக்ஷேதித்து (அதாவது :   குறைத்து),  தன்கண் - ஆத்மனிடத்தில்,
(உள்ள),   வினையினை   -    மித்தியாத்துவ   கர்மத்தை, கீழும் -
தன்னுடைய  அதோ  பாகத்திலும்,  மேலும் - ஊர்த்துவ பாகத்திலும்,
(தள்ளி),   அந்தரம் - நடுவில்,  வெளியை - பிரகாசத்தை (அதாவது :
ஆத்மஜோதியை), செய்யா - செய்து, எ-று.

     நிடேதித்து     தன்     என்பது     நிடேதித்தன்     எனத்
தொகுத்தலாயிற்று.                                       (158)

719.வெளியின்மேல் மிச்சத் தத்தின் வெம்மையைத் தண்மை செய்யா
     வெளியின்கீழ் மிச்ச மெல்லாம் விரகுளி யெழுந்த போழ்தி
     லளவிலா ஞானங் காட்சி யக்கணத் தெழுந்த வற்றால்
     வெளியின்மே னின்ற துண்டங் கண்டமூன் றாகிவீழும்.

     (இ-ள்.) வெளியின்மேல் - ஆத்ம வெளியினது ஊர்த்துவபாகத்தி
லிராநின்ற,   மிச்சத்தத்தின்   -   மித்தியாத்துவ    கருமத்தினுடைய,
வெம்மையை  -  வெப்பத்தை,   தண்மைசெய்யா - குளிர்ச்சி  செய்து,
வெளியின்  -  ஆத்மவெளியின்,   கீழ்  -  அதோபாகத்திலிராநின்ற,
மிச்சமெல்லாம்  -  மித்தியாத்துவமெல்லாம்,   விரகுளி  -  கிரமமாக,
எழுந்தபோழ்தில்  -  விலகின  காலத்தில், அளவிலா - அளவில்லாத,
ஞானம்   -   ஸம்மியக்ஞானமும்,   காட்சி - ஸம்மியக்  தர்சனமும்,
அக்கணத்து -