பயத்தை, ஆக்கி -
செய்து, அந்த மூழ்த்தளவு - ஒரு அந்தர் முகூர்த்தகாலம் வரையில்,
நிற்கும் - அப்பரிணாம நிலைமை நிற்கும்,
எ-று. (161)
722. உபசம காலத் துள்ளோ ரனந்தானு பந்தி தோன்றிற்
குபதமாஞ் சாதஞ் சம்மாத் திட்டியாங் குணத்தை யெய்து
முபசம காலத் தின்பின் மூன்றத்தொன் றுதய மாதல்
சபதமா மிச்சஞ் சம்மா மிச்சிலத் தன்மை தானாம்.
(இ-ள்.)
உபசம காலத்துள் - உபசம காலமாகிய அந்தர்
முகூர்த்தம் நிரம்புவதற்குள் (அந்திய பாகத்தில்), ஓர் அனந்தானுபந்தி
- அனந்தானுபந்தி (குரோத, மான, மாயா, லோபங்களுள் யாதானு)
மொன்று, தோன்றில் - உதயஞ் செய்யுமானால்,
குபதமாம் -
குத்ஸிதபதமாகும் (அதாவது : ஸம்மியக்துவ பர்வதத்து மேனின்று
தலை கீழாக விழுகிற பரிணமமாகும்; அவ்வாறாகி அது),
சாதஞ்
சம்மாத்திட்டியாம் - ஸாஸதான ஸம்மியக்திருஷ்டியாகிற, குணத்தை
- குணஸ்தானத்தை, எய்தும் - அடையும், உபசம காலத்தின் பின் -
உபசமகாலப் பிரமாணமான ஒரு அந்தர்
முகூர்த்தத்தின்மேல்,
மூன்றத்தொன்று - (மித்தியாத்துவம், ஸம்மியக்
மித்தயாத்துவம்,
ஸம்மியக்துவ பிரகிருதிகளாகிய) மூன்றில்
யாதாகிலுமொன்று,
உதயமாதல் - உதயங்கொடுத்தல், சபதமாம் - அந்த
பதமாகும்,
(அவ்வாறாவதில்), மிச்சம் - (மித்தியாத்துவம் உதயங் கொடுத்தால்)
மித்தியாத்துவமும், சம்மாமிச்சு - (ஸம்மியக் மித்தியாத்துவ முதயங்
கொடுத்தால்) ஸம்மியக் மித்தியாத்துவமும், (அல்லது மிஸ்ரீகுணம்),
இலத்தன்மை ஆம் - (மித்தியாத்துவமில்லாத
ஸம்மியக்துவ
பிரகிருதியுதயமானால் அப்போது) ஸம்மியக்துவமுமாகும், எ-று.
தான் - அசை. (162)
723. வேதக முதித்த போழ்தின் மெய்யுணர் வோடு காட்சிக்
கியாதுமோர் குற்ற மெய்தா தெறியுந்தீ வினைக டம்மைப்
போதியுங் காட்சி தானும் பூரணை சென்று நின்று
காதவே தகமுன் னேழைக் காட்சிகா யிகம தாமே.
(இ-ள்.) வேதகம்
- ஸம்மியக்துவ பிரகிருதியானது, உதித்த
போழ்தில் - உதயத்தைக் கொடுத்த காலத்தில்,
மெய் - உண்மை
ஸ்வரூபத்தை யறியும்படியான, உணர்வோடு - ஸம்மியக் ஞானத்தோடு,
காட்சிக்கு - ஸம்யக் தரிசனத்திற்கும்,
யாதும் - எவ்வளவும்
(அதாவது : கொஞ்சமாகிலும்), குற்றம் -
குற்றத்தை, எய்தாது -
அடையாமல், தீவினைகள் தம்மை - பாபவினைகளை,
எறியும் -
கெடுக்கும், (அப்போது), போதியும் - ஸம்மியக்ஞானமும், காட்சிதானும்
- ஸம்மியக் தரிசனமும், பூரணை சென்று - பூர்த்தியடைந்து, நின்று -
நிலைபெற்று, வேத |