346மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)   (அவன் அவ்வாறு பிறந்திருக்கும்போது), இருவரும் -
முன்சொன்ன ஆரியாங்கனைகளிருவரும், இயம்ப - முனிவன் சொல்ல,
கேட்ட    -    செவிக்கொண்ட,    அறத்தினராகி   -   தர்மத்தை
யுடையவர்களாகி,   போக  - (அவனைவிட்டு  நீங்கிச்  சிறிது தூரஞ்)
செல்ல,    பெரியவன்   -   மஹா    தபத்தையுடைய   கிரணவேக
முனிவனாகியமேலோன்,   குகையை   -  பர்வத   குகையை, சேர -
அடைய, (அம்மலைப்பாம்பானது அவனை விழுங்க வேண்டி), எரியெழ
- கண்களில் அக்கினி எழும்படி, விழித்து - அவற்றைத்திறந்து, காணா
- அம்முனிவனைப்பார்த்து,    பிறை    -    மூன்றாம் பிறை போல
வளைவாகிய,   எயிறு - பற்கள்,    இலங்க - விளங்க, அங்காந்து -
வாயைத்திறந்து,  இறைவனை  -  மேலானவனாகிய அம்முனிவரனை,
பிடித்த போழ்தில்  -  பற்றினகாலத்தில்,   (அவன்), அருகவென்று -
அருகனே  என்று,   உரைப்ப  -  சொல்ல, மீளா - அதைக்கேட்டுத்
திரும்பி  வந்து,  அச்சியர்  - ஆரியாங்கனைகளிருவரும், அதனை -
அம்மலைப்பாம்பால்  அம்முனிவனுக்கு நேர்ந்த தீங்கினை, கண்டார் -
பார்த்தார்கள், எ-று.                                     (182)

 743. வெகுண்டுவெய் துயிர்த்துச் சீறி விழித்தன லுமிழ்ந்து வெண்ப
     லகண்டமுஞ் சிலிர்ப்ப வங்காந் தரவுக்கஞ் சாது நாதன்
     நுகந்திரண் டனைய தோளைப் பற்றியாங் குற்ற போழ்தின்
     முகங்கண்டார் முனிவ னோடு மூவரும் விழுங்கப் பட்டார்.

     (இ-ள்.)  (அவ்வாறு  பார்த்தவுடனே),  வெகுண்டு - கோபித்து,
வெய்துயிர்த்து  -  வெப்பமாகப்   பெருமூச்சு விட்டு, சீறி - சப்தித்து,
விழித்து - கண்களை விழித்து,  அனலுமிழ்ந்து - அக்கினியைக் கக்கி,
வெண் . வெளுப்பாகிய,  பல் - பற்கள், அகண்டமும் - முழுமையும்,
சிலிர்ப்ப - சிலிர்த்துக்கொள்ள, அங்காந்த - வாயைத்திறந்த, அரவுக்கு
- அந்த       மலைப்பாம்பிற்கு,      அஞ்சாது     -      (இந்த
ஆரியாங்கனைகளிருவரும்)          பயப்படாமல்,       நாதன் -
முனிசிரேஷ்டனாகிய கிரணவேக முனிவனுடைய, நுகந்திரண்டனைய -
நுகத்தடிதிரண்டதுபோலத் திரட்சிபெற்ற, தோளை - புயங்களை, பற்றி
- பிடித்து,     ஆங்குற்ற     போழ்தின்    - அவ்விடத்தில் அந்த
ஸர்ப்பத்தினெதிரிலடைந்து     இழுத்த     காலத்தில்,   (அப்பாம்பு
அம்முனிவனைக் கழுத்து வரையிலும் விழுங்கிவிட), முகங்கண்டார் -
அவனது    முகத்தை    மாத்திரம்    கண்டவர்களாகி, (தாங்களும்
அப்பாம்பின்    வாய்க்குட்பட்டு),    முனிவனோடும்  - கிரணவேக
முனிவனோடு,  மூவரும் - (அம்முனிவர்    இந்த ஆரியாங்கனைகள்
ஆகிய) மூன்று பேர்களும், விழுங்கப்பட்டார் - அந்த ஸர்ப்பத்தினால்
விழுங்கப்பெற்றார்கள், எ-று.

      அங்காந்தரவுக்கு, என்பதில் அகரந்தொக்கது.          (183)

 744. அருக்கனைச் சனிசெவ் வாயோ டரவுதான் விழுங்கிற் றேபோ
     லருக்கவே கன்றன் னோடே யாரியாங் கனைக டம்மை.