சக்கராயுதன் முத்திச் சருக்கம் 355


Meru Mandirapuranam
 

 759. அஞ்சுவரு டங்கடந்து நாமகளோ டாடி
     வெஞ்சிலை முதற்படை பயின்றபினை வெம்பூஞ்
     செஞ்சரம் வரிந்தசிலை யேந்தித்திறன் மாரன்
     மைந்தனொடு போர்தொடங்கி வாளிதொட லுற்றான்.

   (இ-ள்.)(அதன்மேல்), அஞ்சுவருடம் - ஐந்து ஆண்டு (அதாவது :
ஐந்து  வயது),     கடந்து  -  தாண்டி,  நாமகளோடு  -  சரஸ்வதி
தேவியோடு,  ஆடி - விளையாடி, (அதாவது : சாஸ்திரங்களைக்கற்று
அதன் பிறகு),  வெம் - வெவ்விதாகிய, சிலைமுதல் - வில்முதலாகிய,
படை - ஆயுதவித்தைகளையும், பயின்றபினை - கற்ற பிறகு, வெம் -
விருப்பமுடைய,    செம்   -  செம்மையாகிய,  பூஞ்சரம்  -  புஷ்ப
பாணங்களை,  வரிந்த  - தொடுத்த, சிலை - கரும்புவில்லை, ஏந்தி -
தரித்து,  திறல்  - பராக்கிரமத்தையுடைய, மாரன் - மன்மதனானவன்,
மைந்தனொடு  -   இச்சக்ராயுத  குமாரனோடு,  போர்  தொடங்கி -
யுத்தஞ்   செய்ய   வாரம்பித்து,   வாளி   -   புஷ்ப  பாணத்தை,
தொடலுற்றான் -  தொடுத்து  இவன்மீது  விடுவதற்கு ஆரம்பித்தான்,
எ-று.
 
     இவ்வாறு  கூறியதனால்,   இவன்,   மதனன் போர்ச்செய்கைக்
கிடந்தரத்தக்க யௌவனத்தையடையந்தான் என்பது பெறப்படும். (11)

 760. ஆங்கதனை மன்னனப ராசித னறிந்து
     கோங்கரும்பு போலுமுலைக் கொவ்வையெனச் செவ்வாய்
     தேங்குழலி சித்திரநன் மாலையெனுஞ் செம்பொன்
     வாங்கனைய தோளிதுணை யாகமலி வித்தான்.

    (இ-ள்.)   ஆங்கு   -   அவ்விடத்தில், அதனை  -  (குமாரன்
யௌவனமடைந்த)   அவ்விஷயத்தை,  மன்னன்   -   அரசனாகிய,
அபராசிதன்   -   அபராஜிதனென்பான்,   அறிந்து   -   தெரிந்து,
கோங்கரும்புபோலும்   -   கோங்கின்  அரும்புபோலும்,  முலை  -
ஸ்தனங்களையும், கொவ்வையென - கோவைக்கனிபோன்ற, செவ்வாய்
- சிவந்த  வாயையும்,  தேம்  -  வாசனை  பொருந்திய,  குழலி  -
அளகத்தையுமுடையவளாகிய,  சித்திர  நன்  மாலையெனும்  - நல்ல
சித்ரமாலையென்று   பெயர்   கூறக்கூடிய,  செம்பொன்  -  சிவந்த
பொன்னாலாகிய, வாங்கனைய - வாங்குக்குச் சமானமாகிய, தோளி -
கைகளையுடைய  ஒரு ராஜகுமாரத்தியை, துணையாக - (அவனுக்குப்)
பெண்சாதியாக,   மலிவித்தான்   -   அன்பில்   மிகுந்திருக்கும்படி
செய்தான்  (அதாவது  :  அன்பு  மிகுந்த மனைவியாகச் செய்தான்),
எ-று. (12)

 761. மின்னினொடு மேகம்விளை யாடுவது போல
     வன்னநடை யோடவ னமர்ந்தொழுகும் வழிநாண்