இந்த இரண்டு பேர்களுக்கும், செற்றமில் - த்வேஷமில்லாத, தவத்து -
தபத்தினாலே, தேவனாய - தேவனாய்ப் பிறந்திருந்த,
அச்சீதரைதான்
- அந்த ஸ்ரீதரையானவள், இரதனமாலை - இரத்தினமாலை
யென்னும்
பெயருடைய, மங்கையானாள் - புத்திரியாகப் பிறந்தாள், எ-று.
மற்று இரண்டும் அசைகள். (17)
766. கற்பக வல்லி யீன்ற கன்னிமஞ் சரியைப் போலும்
பொற்புடைத் திருவின் பாதம் பூமக ளிருக்கை காமன்
நற்கணைத் தூணி நங்கை தன்கணைக் கால்க ளூரு
பொற்றிரட் கதலி நல்லார் புகழெனப் பரந்த வல்குல்.
(இ-ள்.) கற்பகவல்லி - கற்பகக்
கொடியானது, ஈன்ற - பெற்ற,
கன்னி - இளமையாகிய, மஞ்சரியைப்போலும் - பூங்கொத்துப்போலும்,
பொற்புடை - அழகையுடைய, திருவின் - லட்சுமி தேவி போன்ற
இந்த அரதன மாலையினுடைய, பாதம் - பாதமானது, பூமகளிருக்கை
- இலக்ஷ்மிதேவியின் இருக்கையாகிய
தாமரைப் புஷ்பமாகும்,
நங்கைதன் - இந்த இரத்தின மாலையினது,
கணைக்கால்கள் -
கணைக்கால்களானவை, காமன்
- மன்மதனுடைய, நல் -
நன்மையாகிய, கணைத்தூணி - அம்பறாத்தூணியாகும்,
ஊரு -
துடைகளானவை, பொன் - ஸ்வர்ணத்தினாலாகிய,
திரள் -
திரட்சிபெற்ற, கதலி - வாழையாகும்,
அல்குல் - அல்குலானது,
நல்லார் - குணவந்தர்களுடைய, புகழென - கீர்த்தியைப்போல, பரந்த
- விசாலித்திராநின்றதாகும், எ-று. (18)
767. மின்சுழி யிடைநற்
கொப்பூ ழோர்கையிற் றாமம் வேய்தோள்
பொன்புனை யமிர்தச் செப்பி
னிணைமுலை வலம்புரியின்
றன்சுரி போலும் நங்கை மங்கல விருக்கை கொவ்வை
நன்கனி யாகுஞ் செவ்வாய் முறுவனற் சிறிய முத்தம்.
(இ-ள்.) நங்கை
- இந்த இரத்தினமாலை -
யென்னும்
நங்கையினுடைய, இடை - இடையானது, மின் - மின்னற்கொடியாகும்,
நல் - நல்ல இலக்ஷ்ணமமைந்த, கொப்பூழ்
- நாபியானது, சுழி -
நீர்ச்சுழியாம், ஓர்கையில்
- அறியுமிடத்தில்,
தாமம் -
முத்துமாலையையணிந்த, தோள் - தோள்களானவை, வேய் -
பச்சை
மூங்கிலாகும், முலை - ஸ்தனங்களானவை,
பொன் புனை -
பொன்னாற் செய்யப்பட்ட, அமிர்தச்
செப்பினிணை - இரண்டு
அமிர்தச் செப்புக்களாகும், மங்கல விருக்கை
- மாங்கலியத்திற்
கிருப்பிடமாகிய
கழுத்தானது,
வலம்புரியின்றன் -
வலம்புரிச்சங்கினுடைய, சுரிபோலும் - சுருளுக்கொப்பாகும்,
செவ்வாய்
- சிவந்த வாயானது, கொவ்வை
நன்கனியாகும் - நல்ல
கோவைக்கனியாகும், முறுவல் - பற்களானவை, நல் - அழகிய, சிறிய
- சிறுமையாகிய, முத்தம் - முத்துக்களாகும், எ-று. (19)
|