768. முகத்திடை யழகெ லாம்போந் தொழுகுவ
தொக்கும் மூக்கும்
வகுத்தநன் முகத்திற் கேற்ற
வழகெய்த வடிந்த காதும்
நகத்தினுங் கண்ணொப் பில்லை நற்சிலை புருவம்
நங்கை
முகத்தினுக் கொப்பு திங்கண் முயலின்றி யிருந்த தாமே.
(இ-ள்.)மூக்கும் - நாசியும், முகத்திடை - முகத்தினிடமாகவுள்ள,
அழகெலாம் - அழகுகளெள்லாம், போந்து - வந்து, ஒழுகுவதொக்கும்
- ஒழுகுவதற்குச் சமானமாகும், காதும் -
செவிகளும், வகுத்த -
வடிவுபெற்ற, நல் - நன்மையாகிய, முகத்திற்கு - வதனத்திற்கு, ஏற்ற -
இசைந்த, அழகெய்த - அழகடைய, வடிந்த - வடிவுபெற்றனவாகும்,
நகத்தினும் - இந்தப் பூமியில், கண் - நேத்திரங்களுக்கு,
ஒப்பில்லை
- உவமையில்லை, புருவம் - புருவங்கள், நல் - நன்மையாகிய, சிலை
- விற்களாகும், நங்கை -
இந்த இரத்தினமாலையினுடைய,
முகத்தினுக்கு - முகத்திற்கு, ஒப்பு
- உவமையானது, திங்கள் -
சந்திரன், முயலின்றி - களங்கமின்றி,
இருந்ததாம் - இருந்த
தோற்றமாகும், எ-று.
நகத்தினும் என்பதில் உம் - அசை. (20)
769. நெறிந்துநெய்த் தொழுகி நீண்டு நீலத்தின் கதிரை யெல்லாங்
கறந்தொரு கற்றை யாக்கி வைத்ததாங் கவரி பந்தம்
புறம்புள வழகு சொல்லிற் புரிந்துழிப் பார்த்த கண்ணைத்
திறம்பிடா வகையைச் செய்யுஞ் செப்புவ தினிமற் றென்னோ.
(இ-ள்.) கவரிபந்தம் -
தலைமயிர்க் கற்றையானது, நெறிந்து -
நெளிவு கொண்டு, நெய்த்து - தைலப் பசையுடையதாய், ஒழுகி -
முறையாக வளர்ந்து, நீண்டு - நீளமாகி,
நீலத்தின் - இந்திர
நீலத்தின், கதிரையெல்லாம் - கிரண ஸமூகங்களை, கறந்து - வாங்கி,
ஒரு கற்றையாக்கி - ஒரு திரளாகச்
சேர்த்து, வைத்ததாம் -
வைத்ததாகும், புறம்புள - பின் பக்கத்திராநின்ற, அழகு - அழகை,
சொல்லின் - கூறுமிடத்து,
புரிந்துழி - அதனை பார்க்க
விரும்பும்போது, பார்த்த கண்ணை
- பார்த்த கண்களுக்கு,
திறம்பிடாவகையை - நீங்காமையாகிய
விதத்தை, செய்யும் -
செய்துவிடும், இனி - இன்னமும், செப்புவது
- சொல்வது, என் -
என்ன, எ-று.
கண்ணை - உருபு மயக்கம். மற்று, ஓ -
அசைகள்.(21) 770. மயிலிய லன்னம் போலு மென்னடை மான்மை
நோக்குங்
குயில்குழன் மழலை நல்லியாழ் மொழிமலர்க் கொடிய னாடன்
னியல்பெலாந் தூத ராற்சக் கராயுத
னறிந்து பின்னைத்
தையலைவச் சிராயு தற்குத் தருகெனத் தூது விட்டான்.
|