360மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.) (இவள் இவ்வகை அழகு பெற்றிருக்கும்போது),  மயில் -
ஆண்   மயில்போன்ற, இயல் -  சரீரச்சாயலும், அன்னம்போலும் -
ஹம்ஸபக்ஷி போன்ற, மென்னடை - மிருதுவாகிய நடையும், மான்மை
நோக்கும் -  பெட்டை மான் போன்ற மருண்ட பார்வையும், குயில் -
குயிலிசையையும்,   குழல்   -   புள்ளாங்குழலிசையையும்,   யாழ் -
வீணையிசையையும்,   (நிகர்த்த),   நல்  -  நல்ல,  மழலைமொழி  -
மழலையாகிய   வசனமும்,  (உடைய),  மலர்க்கொடியனாள்  தன் -
புஷ்பக்கொடி  போல்பவளாகிய  இந்த  இரத்தின  மாலையினுடைய,
இயல்பெலாம் - அழகதிசயங்களெல்லாம், தூதரால் - ஒற்றர்களினால்,
சக்கராயுதன் -  சக்கராயுத  வரசன்,  அறிந்து - தெரிந்து, பின்னை -
(முன்னுரைத்தபடி  தன்  புத்திரனுக்கு மணஞ் செய்ய வேண்டுமென்று
கருதியிருந்ததற்குப்)    பிறகு,    தையலை   -   இக்கன்னிகையை,
வச்சிராயுதற்கு -  தனது  குமாரனாகிய  வஜ்ராயுதனுக்கு, தருகென -
கொடுக்க  வேண்டுமென்று,  தூது - தூதர்களை, விட்டான் - (அவள்
தந்தையிடம்) அனுப்பினான், எ-று. (22)

 771. தூதர்வந் துரைத்த மாற்றங் கேட்டதி வேகன் சொன்னான்
    போதுலாங் குழலை மைந்தன் புணர்ந்திடிற் புகழ்ச்சித் தாமென்
    றியாதுநீ ருரைத்த தெல்லா மிசைந்தன னென்னப் பின்னை
    நீதிநூல் வகையின் வேள்வி யாகுதி நெறியிற் செய்தார்.

   (இ-ள்.) (அவ்வாறனுப்பப்பட்ட),   தூதர்  -  தூதர்கள்,  வந்து -
பிருதிவிதிலக   நகரம்   வந்து,   உரைத்த  -  சொன்ன, மாற்றம் -
வசனத்தை,  அதிவேகன்  - அதிவேக மகாராஜன், கேட்டு - கேட்டு,
போதுலாம்  -    புஷ்பங்கள்    தங்கியிருக்கப்பட்ட,    குழலை -
அளகத்தையுடைய நமது புத்திரியை, மைந்தன் - வச்சிராயுத குமாரன்,
புணர்ந்திடில்  -  சேர்ந்தால்,  (அது),  புகழ்ச்சித்தாம் - பெருமையை
யுடையதேயாகும்,  என்று  -  என்று, சொன்னான் - சொன்னவனாகி,
பின்னை -  பின்னையும்,  யாது -  எதுவானாலும்,  நீர்  -  நீங்கள்,
உரைத்தது யாது - சொல்லியது எதுவோ, எல்லாம் - அதற்கெல்லாம்,
இசைந்தனன் -  நான்  சம்மதித்தேன்,  என்ன  -  என்று  சொல்ல,
(அவன்   சம்மதத்தின்    பேரில்   பெரியோர்   அப்பெண்ணுக்கும்
குமரனுக்கும்),  நீதிநூல்   வகையின்  -  நீதி  சாஸ்திர  கிரமத்தால்
(ஏற்பட்ட),  வேள்வி  -  கலியாண  வேள்வியை, ஆகுதி நெறியில் -
ஓமாகுதியின் விதிப்படி, செய்தார் - செய்தார்கள், எ-று. (23)

 772. கடிமலர்க் கொடிய னாளைக் காவல குமர னெய்தி
     வடிவுடைத் தடக்கை வேழம் பிடியொடு மகிழ்வ தேபோற்
    கொடிமலர்ப் பந்தர் குன்றம் வாவியுங் காவு மெய்திப்
    படிமிசைப் பட்ட வின்பம் பரிவின்றி நுகரு நாளில்.