ஞானத்தாலறிந்து, தேறி
- உண்மையைத் தெளிந்து, ( அதாவது :
தரிசன சுத்தியாகி), தினையனைத்தானும்
- தினையளவாகிலும்,
(அதாவது : சிறிதாயினும்),
பற்றில் - ( அன்னியத்திரவிய
வாஞ்சையாகிற) ராகபரிணாமத்தில், செறிவிலா - சேராத, நெறியை -
வழியை (அதாவது : சுத்தஸ்திதி
ஸ்வரூபமாகிய ஸம்மியக்
சாரித்திரத்தை), மேவி - பொருந்தி,
தனை - தன்னை, வினை -
கர்மங்கள், நீங்கி நின்ற -
விலகிநின்ற, தன்மையனாக -
சுத்தஸ்வபாவத்தை யுடையவனாக, நோக்க -
வீதராக பரிணதியால்
காண, (அப்போது), விகாரங்களோடு - ஆத்மகுண
விகாரங்களோடு,
(கூடிய), வினை - பாவகர்ம திரவிய கர்மங்கள், எனைத்தானும் -
எவ்வளவானாலும், நீங்கும் - ஆத்மனிடத்தில்
நிற்காமல் விலகி
மோட்சமாகும், என்றான் - என்று பிஹிதாஸ்ரவ குருக்கள் கூறினான்,
எ-று.
‘மெய்ம்மையை’என்பது தீபகமாக நான்கிடங்களினுங் கூட்டப்பட்டது. (28)
777. என்றலும் முடியை மன்னன் சக்கரா யுதனுக்
கீந்து
குன்றெனத் திரண்ட தோளாய் குவலயங்
காத்துச் சின்னாட்
சென்றுமண் காவ லுன்பாற் சிறுவனுக்
கீந்து போகி
நின்றிடா நிலைமை நீங்கு
நீயெனத் தொழுது நீத்தான்.
(இ-ள்.) என்றலும்
- (இவ்வாறு மோக்ஷமாகும்) என்று முனிவரன்
சொல்லிய மாத்திரத்தில், மன்னன் - அபராஜித மஹாராஜன், முடியை
- அரசாளும்படியான பட்டாபிஷேக முடியை, சக்கராயுதனுக்கு -
தன்
புத்திரனாகிய சக்ராயுத குமாரனுக்கு, ஈந்து - பட்டாபிஷேக
பூர்வகம்
கொடுத்து, (அவனை நோக்கி), குன்றென - பர்வதம்போல, திரண்ட -
திரட்சிபொருந்திய, தோளாய் - புயத்தையுடைய குமாரனே!, சின்னாள்
- சிலநாட்கள்வரை, நீ - நீ, குவலயங்காத்து -
இப்பூமியை ஆட்சி
செய்து, சென்று - அதன்வழியிலே நடந்து, (அதன்மேல்),
மண்காவல்
- இப்பூமியின் காவலை, உன்பால் - உன்னிடத்தேயுள்ள,
சிறுவனுக்கு
- குமாரனுக்கு, ஈந்து - கொடுத்து, போகி -
இராஜ்யத்தினின்றும்
விலகிப்போய், நின்றிடா நிலைமை
- அனித்திய ஸ்வரூபமாகிய
இப்பிறவியை, நீங்கு - நீங்கித் தபஞ்செய்து மோட்சமடைவாயாக, என
- என்று சொல்லி, (இராஜ்ஜியத்தை விடுத்து),
தொழுது - (மீண்டும்
போகி முன்சொன்ன குருக்களை) வணங்கி,
நீத்தான் - சர்வசங்க
பரித்தியாகமாகிய தீக்ஷையைக் கைக்கொண்டான், எ-று. (29)
வேறு.
778. அபரா சிதன்மா தவனா யினபின்
னுவரோ தமுடுத் தநிலத்
தையெலாஞ்
சகரா யுதனுந் தளரா மைநிறுத்
தபரா சிதனும் மவனா
யினனே.
|