372மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

னிடத்தே, (படுத்து), பரு - பெரிய (அதாவது : விலையுயர்ந்த, மணி -
இரத்தினத்தாலும், பவழத்தின் - பவழத்தினாலும், (செய்யப்பட்டு), காழ்
- உறுதி  பொருந்திய,    மஞ்சின்மேல்  -  கட்டிலின்மேல்,  அம் -
அழகிய,  சொலார்கள்  -  சொல்லையுடைய  ஸ்த்ரீமார்கள், வருட -
பாதந்தடவ,  மாபோல்  -  யானைபோல, துயின்றார் - மெய்ம்மறந்து
தூங்கியவர்கள்,  முன்பு  -  பூர்வத்தில்,  தாம் -  தாங்கள், செய்த -
இயற்றிய,  தீமை  -  பாபவினையானது,  முளைத்துழி - உதயத்தைக்
கொடுத்த போது,  கணத்தின் -  க்ஷணநேரத்திலே,  வேறாகி - முன்
சொன்னவைகளுக்கு    முற்றிலும்    வேறாகி,   துஞ்சினார்போல் -
செத்தவர்களைப்போல,     துகள்   -    புழுதிகளை   (அதாவது :
குப்பைகளை), மாலை - இயல்பாகவுடைய, நிலத்து - வெறு நிலத்தில்,
உறைவர் -   தங்கிப்படுப்பார்கள்,   கண்டாய்   -    இதனையும் நீ
பார்த்திருக்கின்றாய், எ-று.

    1மெத்தையின் ஐந்துவித வஸ்துக்களாவன : "சிறுபூளை செம்பஞ்சு
வெண்பஞ்சு சேண, முறுதூவி சேக்கையோரைந்து" என்பனவாம். (47)

 796. கடல்விளை யமிர்த மன்ன கவளம்பொற் கலத்திற் காமத்
     துடியிடை மகளி ரேந்தத் துயரமுற் றரிதி னுண்டா
     ருடையகல் கையி னேந்தி யூர்தொறும் புக்குப் பெற்ற
     வடகினை யமர்ந்துண் பார்கள் நல்வினை யவிந்த காலை.

   (இ-ள்.)   கடல் -    க்ஷீரஸமுத்திரத்தில், விளை - உண்டாகிய,
அமிர்தமன்ன - அமிர்தத்திற்குச்  சமானமாகிய,   கவளம்  - அன்ன
கவளத்தை, பொற்கலத்தில் - பொற் பாத்திரத்தில், காமத்துடியிடை -
விருப்பமுள்ள  உடுக்கை  போன்ற   இடையையுடைய,   மகளிர் -
ஸ்த்ரீமார்கள்,      ஏந்த    -      தாங்க,         துயரமுற்று -
(வேண்டுதலில்லாதபடியால்  அதை உண்பதற்கு) துக்கமுற்று, அரிதின்
- மிகவும்   அருமையாக,     உண்டார் -  வெறுப்புடனுண்டவர்கள்,
நல்வினை -  புண்ணியவினையானது,   அவிந்த   காலை - நீங்கின
காலத்தில்,   உடை -    உடைந்த,   அகல் -    மட்பாத்திரத்தை,
கையினேந்தி -   கையிலெடுத்துக்     கொண்டு,     ஊர்தொறும் -
ஊர்களூர்கள் தோறும், புக்கு -  பிச்சையென்று கூவியடைந்து, பெற்ற
- ஊராராலிடப்பெற்ற,   அடகினை  -  இலைக்கறியை,  அமர்ந்து -
பொருந்தி இச்சித்து,   உண்பார்கள்  -  இனிமையாகப் புசிப்பார்கள்,
எ-று. (48)

 797. நுரையினும் நொய்ய வாய நுண்டுகி லுடுப்பி னொந்து
     கரைவபோ னரலு மல்குற் கற்பக வல்லி யன்னார்
     தெருவிடை வீழ்ந்து தீண்டாச் சிலதுணி யுடுப்பர் செல்வ
     மொருவர்கண் ணென்று நில்லா துறுதிகொண் டொழுகு கென்றான்.