(இ-ள்.)
நுரையினும் - பால்நுரையைப் பார்க்கிலும், நொய்யவாய
- மிருதுவுள்ளனவாகிய, நுண் - நேர்த்தி பொருந்திய, துகில் -
பட்டு
வஸ்திரங்களை, உடுப்பின் - உடுத்துக்கொள்ளுமிடத்தில், (அவற்றைத்
தாங்கமுடியாது), நொந்து - வருந்தி, கரைவபோல் -
மனம் உருகிக்
கதறுவதுபோல், நாலும் - (மேகலாபரணத்தால்)
ஒலி செய்கின்ற,
அல்குல் - அல்கு
வினையுடைய, கற்பகவல்லியன்னார் -
கற்பகக்கொடிக் கொப்பாகிய மிகு
புண்ணியமுடைய மாதர்களும்,
(அப்புண்ணிய முலர்ந்தால் உடுப்பதற்கோராடையுமின்றி),
தெருவிடை
- தெருவினிடத்தில், வீழ்ந்து - வீழ்ந்து
கிடந்து, தீண்டா -
தொடுவதற்கொப்பாத, சிலதுணி - சிலவாகிய கந்தைத்துணிகளையும்,
உடுப்பர் - உடுத்துவார்கள், (ஆகையால்), செல்வம் - ஸம்பத்தானது,
ஒருவர்கண் - ஒருவரிடத்திலேயே, என்றும் - எப்பொழுதும்,
நில்லாது
- ஸ்திரமாக நிற்கமாட்டாது, (ஆகையால்
குமாரனே!), உறுதி -
உறுதியாகிய குணத்தை, கொண்டு -
ஸ்வீகரித்து, ஒழுகு -
நடப்பாயாக, என்றான் - என்றும் சொன்னான், எ-று. (49)
798. இனையன பலவுஞ் சொல்லி வச்சிரா யுதனும் பின்னைத்
தனையனை விடுத்துப் போகிச் சக்கரா யுதனைச் சார்ந்து
முனிவனற் கமல மன்ன வடியினை முடியிற் றீட்டி
வினையின பயன்க டம்மை வெருவின னடிக ளென்றான்.
(இ-ள்.) (மேலும்),
இனையன - இத்தன்மையனவான, பலவும் -
பல தர்ம வசனங்களையும், சொல்லி - உரைத்து, வச்சிராயுதனும் -
அந்தவச்சிராயுத மகாராஜனும், பின்னை - பிறகு, தனையனை -
தனது
குமாரனாகிய இரத்தினாயுதனை, விடுத்து - இராஜ்யத்தில் விடுத்து,
போகி - தான் தபோவனத்திற்குப்
போய், சக்கராயுதனை -
சக்ராயுதமுனிவனை, சார்ந்து
- அடைந்து, முனிவன்
-
அம்முனிவரனுடைய, நல் - நன்மையாகிய, கமலமன்ன -
தாமரைப்
புஷ்பத்திற்குச் சமானமாகிய, அடியினை -
பாதங்களை, முடியில் -
சிரசில், தீட்டி - படியச்செய்து, (அதாவது : அவ்வடிகள்
முடியிற்பட
வணங்கி அவனை நோக்கி), அடிகள் - ஸ்வாமிகளே!, வினையின -
கருமங்களினது, பயன்கடம்மை
- பலன்களாகிய ஸம்ஸார
விஷயங்கட்கு, வெருவினன் - யான் பயந்தேன், என்றான் -
என்று
சொன்னான், எ-று. (50)
799. புலைமக ரெனினுஞ் சாலப் புயவலி யுடைய ராகின்
நிலைமகட் கிறைவ ராகி நின்றிடுந் திருவு மங்கே மலையின
குலத்த ரேனும் புயவலி மாய்ந்த போழ்திற்
றலைநில னுறுத்தி யொன்னார் தாளணைந் துழைய ராவார்.
(இ-ள்.) அவ்வாறு சொல்லிப்
பின்னரும்), புலைமகரெனினும் -
(சிலர்) கெட்டகுணமுடைய ஜாதியிற் பிறந்தாராகிலும்,
சால - மிகவும்,
புயவலி - புஜ
|