பலத்தை, உடையராகில் - உடைத்தானவராயிருந்தால், நிலமகட்கு -
இப்பூமிக்கு, இறைவராகி - இராஜாக்களாகி,
(விளங்குவார்கள்),
அங்கே - அவரிருக்கும் அவ்விடத்திலே, திருவும் - ஐஸ்வரியமும்,
நின்றிடும் - வந்து நிற்கும், மலையினகுலத்தரேனும் -
பர்வதம்போல
உயர்ந்த ஜாதியிற் பிறந்தவரானாலும்,
புயவலி - புஜபலமானது,
மாய்ந்தபோழ்தில் - அவர்களிடம் குறைந்த
காலத்தில், தலை -
தங்கள் தலையை, நிலனுறுத்தி - பூமியில்
படும்படியாக வணங்கி,
ஒன்னார் - சத்துருக்களுடைய, தாளணைந்து - பாதத்தைச் சார்ந்து,
உழையராவார் - வேலைக்காரர் ஆவார்கள், எ-று. (51)
800. வினைவச மாய விந்த வீறிலா வாட்கை
தன்னை
நினைதொறு முள்ள நின்று நடுங்கிடு
மடங்கி நோற்று
வினைகளை வென்றிட் டென்றன்
விழுக்குணம் பொருந்தி மீளா
நினைவரு முலக மெய்த நினைந்தியான்
வந்த தென்றான்.
(இ-ள்.) வினைவசமாய
- கருமத்தின் வசமாகிய, வீறிலா -
பெருமையில்லாத, இந்த வாட்கை தன்னை
- இந்த ஸம்ஸார
வாழ்க்கையை, நினை தொறும் - நினைக்குந்தோறும்,
உள்ளம் -
மனதானது, நின்று - தர்ம பாவனையில் நின்று, நடுங்கிடும் -
நிர்வேக
பாவனையால் பயப்படும், (ஆகையால்),
அடங்கி - 1(ஈராறடக்
கங்களால்) அடங்கி, நோற்று - (ஆத்ம
பாவனையோடு கூடிய
தபஸை) நோற்று, வினைகளை - கருமங்களை, வென்றிட்டு - ஜயித்து,
என்றன் - என்னுடைய, விழுக்குணம் - பெரிதாகிய சுத்த குணத்தை,
பொருந்தி - சேர்ந்து, நினைவரும் - நினைத்தற்கரிதாகிய, மீளாவுலகம்
- மறுபடியும் திரும்பிவராத உலகமாகிய 2மோட்சத்தை, யான் - நான்,
எய்த - அடையும்படியாக, நினைந்து
- நினைத்து, வந்தது -
தங்களிடம் வந்ததாகும், என்றான் - என்று சொன்னான், எ-று.
1ஈராறடக்கமாவது :- பிராணி ஸம்யமம் ஆறு, விஷய ஸம்யமம்
ஆறு. 2மோட்சத்தின் ஸ்வரூபத்தை ஸுகபோதையில்
பத்தாவது
அத்தியாயத்திலும், அதை அடையும்
மார்க்கத்தை மேற்படி
புஸ்தகத்தின் மற்ற ஒன்பது அத்தியாயங்களிலும் (அல்லாமலும்) ஸமய ஸாரத்திலுங் கண்டுகொள்க. (52)
801. சமைதமஞ் சாந்தி காந்தி தயாமலிந் தியாக்கை நோக்கி
யமைவருந் தொழில ரன்றி யச்சங்க ளேழு மின்றி
நமர்பிற ரென்ப தின்றி யொழிதல்மா தவமி தாமே
அமைகவென் றிறைவன் சொல்ல வருந்தவந் தொடங்கினானே.
(இ-ள்.)(அவ்வாறு வச்சிராயுதன் சொன்னதைக் கேட்டு), சமை -
உத்தமக்ஷமையும், தமம் - மனதைக் கன்மேந்திரிய
விஷயங்களின்
வழிச் செல்லாது நிக்கிரகிக்கும் விஷய ஸம்யமமும், சாந்தி - உபசம
பரிணாமமும் (அதாவது : ராகத்வே
|