சக்கராயுதன் முத்திச் சருக்கம் 375


Meru Mandirapuranam
 

ஷாதிகள்    வரவொட்டாது      சுத்தோபயோகத்திற்    செல்லும்
ஆத்மபாவனையும்),  காந்தி - சுத்தசாரித்திரமும், தயா - ஜீவதயவை,
மலிந்து - நிறைந்து, யாக்கை - ஷட்ஜீவநிகாய ஸமூகத்தை,  நோக்கி
- பார்த்து,   (அவற்றை உபசரித்தலாகிய),   அமைவரும் -  சேர்ந்து
அனுஷ்டிப்பதற்கரிதாகிய,   தொழிலர் -  (பிராணி    ஸம்யமமாகிய)
தொழிலும்   உடையவர்களாகியும்,   அன்றி   - அவையல்லாமலும்,
அச்சங்களேழும் - ஸம்மியக்தர்சன ஞானபலத்தால் ஸப்த பயங்களும்,
இன்றி - இல்லாமலும்,  நமர் பிறர் என்பதின்றி - நம்மவர் அன்னியர்
என்னும்  பேதமில்லாமலும்,   (தெளிந்து),   ஒழிதல்  -  ஸர்வஸங்க
பரித்தியாகம்  பண்ணுதலும்,  (ஆகிய),   இது -   இத்தன்மையானது,
மாதவம் - மஹாதபம்,  ஆம் -  ஆகும்,  அமைக -  இப்படிப்பட்ட
தபத்தைச்   சேர்வாயாக,   என்று -   என்று,  இறைவன்  -  முன்
அரசனாயிருந்த   சக்கராயுத   முனிவரன்,    சொல்ல  -  சொல்ல,
(வச்சிராயுதன்), அருந்தவம் - செய்தற்கரிய தபஸை, தொடங்கினான் -
செய்யத்தொடங்கி ஏற்றுக்கொண்டான், எ-று. (53)

 802. அரியன செய்ய வல்லா ரான்றவ ரன்றி யாரே
     வரிசையின் மன்னன் மைந்தன் மைந்தனும் வையந் தன்னை
     யொருதுகள் போல விட்டா ருலகெலா மிறைஞ்ச நின்றா
     ரிரவியே யன்றி நின்ற விருள்கடிந் தெழலு முண்டோ.

   (இ-ள்.) அரியன - செய்தற்கருமையானவற்றை, செய்ய - செய்து
பலன்   பெறுவதற்கு,    வல்லார் -     வல்லமையையுடையவர்கள்,
ஆன்றவரன்றி -    பெரியோர்களாகிய குணவந்தரேயல்லது,  யார் -
மற்றெவர்கள்?,    ஆன்றவர்  -   பெரியோராவர்?,   வரிகையில் -
குணத்தின் கிரமத்தால், மன்னன் - அபராஜித மகாராஜனும், மைந்தன்
- அவனுடைய  குமாரன்  சக்ராயுதனும்,  மைந்தனும்  - அவனுடைய
குமாரன்    வஜ்ராயுதனும்,     (ஆகிய   இம்மூவர்களும்   அரியன
செய்யவல்லவர்களா யிருந்தமையின்),  வையந்தன்னை -  இந்தப் பூமி
ராஜ்யத்தை,   ஒரு   துகள்போல -   ஒரு  தூளுக்குச்  சமானமாக,
(எண்ணி),       விட்டார்      -      பரித்தியாகம்     பண்ணிப்
பெரியோர்களாயினார்கள்,    (அதனால்),   உலகெலாம்   -   இந்த
லோகத்திலுள்ள    பவ்வியப்    பிராணிகளெல்லாம்,    இறைஞ்ச -
வணங்கும்படியாக,   நின்றார்  - ஏகத்துவபாவனையில்  நின்றார்கள்,
(இன்னும்),இரவியேயன்றி - ஸூர்யனேயல்லாமல், நின்ற - உலகத்தில்
வியாபித்து நின்ற,  இருள் - அந்தகாரத்தை, கடிந்து - நீக்கி, எழலும்
- செல்வதும், உண்டோ - வேறொன்றுண்டோ?, (இல்லை; அதுபோல
இத்தகைய   ஆன்றோரன்றி  அஞ்ஞானாந்தகாரத்தை  வேறொருவர்
நீக்கமாட்டார்), எ-று.

      ‘ஆன்றவர்? என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (54)

 803. திக்கய மலையைப் போலச் சிந்தனை திருத்திச் சின்னா
     ளர்க்கன்வந் துதயத் துச்சி யடைவதே போல வந்து