805. மோகனீ யத்தி னோடும் முப்பத்தேழ்
பகடி வீழா
வேகயோ கத்தோ டொன்றா வெழுந்தசுக்
கிலத்தி யானம்
வேகயோ கத்தி னீரெண் பகடிகள்
வீழ்ந்த வெய்யோன்
மேகயோ கத்தின் வீட்டின்
விரிந்தன வனந்த நான்மை.
(இ-ள்.) (மேலும்),
வேகயோகத்தோடு - தீவ்ரமாகியப்ரதக்த்வ
விதர்க்க வீசாரமென்னும் சுக்கிலத்தியான
யோகத்தோடு கூடவே,
(அதாவது : அதனை அனுஷ்டித்ததால் அதன்
பூர்த்தியுடனே),
மோகனீயத்தினோடும் - முன் பாடலில் சொன்ன தர்சன
மோஹனீயம்
தவிர பாக்கியாகிய சாரித்திர மோஹனீயம்
இருபத்தொன்றுடன்,
முப்பத்தேழ்பகடி - (நாமகர்மத்தில் பதின்மூன்றும்,
தர்சனாவரணீய
கர்மத்தில் மூன்றுமாக) முப்பத்தேழ் பிரகிருதிகள்,
வீழா - வீழ்ந்து,
(அதாவது : ஆத்மனைவிட்டு நீங்கி, அப்போது),
ஒன்றாவெழுந்த
சுக்கிலத்தியானம் - ஏகத்துவவிதர்க்க வீசாரமென்னும்
இரண்டாஞ்
சுக்கிலத்தியானத்தின், வேகயோகத்தின்
- தீவ்ரமாகிய யோக
பரிணாமத்தால், ஈரெண்படிகள் - (தர்சனாவரணீய
கர்மத்தில், முன்
வீழ்ந்தது மூன்றுபோக பாக்கி ஆறும், ஞானாவரணீய கர்மம் ஐந்தும்,
அந்தராய கர்மம் ஐந்தும் ஆக) பதினாறு பிரகிருதிகள், வீழ்ந்த -
நீங்கின, (அப்போது), மேகயோகத்தின் - மேகக் கூட்டங்களின், வீடு
- விடுகையையுடை (அதாவது : மேகக் கூட்டங்களினின்றும் விலகிய),
வெய்யோனின் - சூர்யனைப்போல (அதாவது :
அச்சூரியனானவன்
தனது குணத்தால் பிரகாசிப்பது போல), அனந்த நான்மை - (இந்தச்
சக்ராயுத பட்டாரகருக்கு அனந்த
ஞானம் அனந்த தர்சனம்,
அனந்தசுகம், அனந்த வீர்யமென்னும்)
அனந்த சதுஷ்டயங்கள்,
விரிந்தன - விசாலிக்கப்பெற்றன, எ-று. (57)
இந்தக் கர்மக் கேட்டின் விவரங்களும், நாமங்களும், முன்
இரண்டாவது சஞ்சயந்தன்
முக்திச்
சருக்கத்தில்
சொல்லப்பட்டிருக்கின்றன; மேலும் பதின்மூன்றாவது சமவசரணச்
சருக்கத்தில் மேரு மந்தரர்கள்
கர்மக் கெடுகையினும் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆதலின் இவற்றை இவ்விரண்டு
சருக்கங்களிலும் பார்த்துணர்ந்து கொள்க.
806. வெய்யவ னெழலும் வையம் வியாபரிப்
பதனைப் போல
வையமி லனந்த நான்மை யெழுந்தவக்
கணத்து வானோர்
மையறு விசும்பை யெல்லா மறைத்துடன்
வந்து சூழ்ந்து
பொய்யறு தவத்தி னானைப்
புகழ்ந்தடி பரவ லுற்றார்.
(இ-ள்.) வெய்யவன் -
ஸூர்யன், எழலும் - உதயமாதலும்,
வையம் - பூமியிலுள்ளோர், வியாபரிப்பதனைப்போல - (தங்கள்
தங்கள்) தொழிலில் செல்வதுபோல, ஐயமில் - குற்றமில்லாத,
அனந்த
நான்மை - அனந்த சதுஷ்டயமானது,
எழுந்த வக்கணத்து -
உதயமான அக்காலத்தில், வானோர் - சதுர் நிகா
|