|  
       யக்கருதி),  உற்ற   -   முன்னே  தன் வாயிலகப்பட்டிருந்த, ஊன் - 
        மாமிசத்தை, விட்டது - போட்டுவிட்டதை, ஒக்கும் - நிகர்க்கும், எ-று.	 
      மாமிசத்துண்டை   வாயிற்   கௌவிய ஒரு நரி ஜலத்திற்குள் கண்ட 
        மஸ்யத்தைப்    பிடிக்கக்கருதி     மாமிசத் துண்டத்தைக் கரையில் 
        போட்டுவிட்டு    ஜலத்திற்   பாய்ந்தது; மீன் அதற்கு அகப்படாமல் 
        ஓடிப்போயிற்று. நரி திரும்பி வருவதற்குள் மாமிசத் துண்டையும் ஒரு 
        பருந்தடித்துக்கொண்டு போய்விட்டது. 									                       (5)	 
      818.	துன்பத் தாற்றுன்பந் துய்த்த லல்லது 
            துன்பத் தாலின்பந் துய்க்க வெண்ணுத 
            லன்பிற் காஞ்சிர மாக்கி மாங்கனி 
            தின்குற் றஃதவர் சிந்தை வண்ணமே.	 
           (இ-ள்.)  துன்பத்தால் - தவஞ்செய்வதாலடையும் வருத்தத்தாலே, 
        துன்பம்    -   சரீர    துக்கத்தையே, துய்த்தலல்லது   -  தற்காலம் 
        அனுபவித்தலே    யல்லாமல்,    துன்பத்தால்  - அத்துன்பத்தினால், 
        இன்பந்துய்க்க   - சௌக்கியத்தைப் பின்பு அனுபவிக்க, எண்ணுதல் - 
        நினைத்தலானது,    (எவ்விதமென்றால்),  காஞ்சிரம் - எட்டி மரத்தை, 
        அன்பில் - ஆசையினால், ஆக்கி - உண்டுபண்ணி, (அதில்), மாங்கனி 
        - மாம்பழத்தை,   தின்குற்றது  -    தின்ன நினைத்ததாகும், அஃது - 
        அவ்வாறு நினைக்கும்  அது, அவர் - அக்கொள்கையுடையவர்களின், 
        சிந்தை     வண்ணம்    -    நினைப்பின்   விதமாகும்,   (என்றும் 
        சொல்பவனாயினான்),  எ-று.						                                 (6)	 
      819.	வினைகள் வேறுபட் டுதயஞ் செய்தலா 
            வினைய சிந்தைய னாகிச் செல்லுநாண் 
            முனிவன் வச்சிர தந்தன் மொய்ம்மலர் 
            வன மனோகரம் வந்து நண்ணினான்.	 
           (இ-ள்.)   வினைகள்    - கர்மங்கள்,    வேறுபட்டு - ஆத்ம 
        குணத்தையறிய   வொட்டாமல்  விகாரப்பட்டு, உதயஞ் செய்தலால் - 
        உதயத்தைக் கொடுத்தலால் இனைய - இத்தன்மையான, சிந்தையனாகி 
        - (தத்துவார்த்த   அசிரத்தான) எண்ணமுடையவனாகி, செல்லு நாள் - 
        இரத்தினாயுத    மஹாராஜன்  செல்கின்ற காலத்தில், வச்சிரதந்தன் - 
        வஜ்ரதந்தனென்னும்    பெயரையுடைய,    முனிவன்    - ஜிநதீக்ஷை 
        யினையுடைய  முனிவரன் ஒருவன், மனோகரம் - மனோஹரமென்னும் 
        பெயரினையுடைய,  வனம்   - (இரத்தினாயுத  வரசனுடைய) உத்தியான 
        வனத்தில்,     வந்து     -    சங்கங்களோடு யத்ரேச்சையாக வந்து, 
        நண்ணினான் - சேர்ந்து தங்கினான், எ-று.                    				 (7)	 
      820.	மேரு மால்வனப் பத்தி ராலத்துள் 
           வார ணம்மலை சூழ நின்றதும்  |