வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 387


 

    வரையோ டெற்றவும் வட்ட மாதிகள்
    பொரவும் வாதகா யங்கள் பொன்றுமே.

     (இ-ள்.)  திரை  - அலையினால், அலைப்பவும் - அலசலாலும்,
தீயில்    -   அக்னியில், காய்ச்சவும்   - காய்ச்சுவதினாலும், தரை -
பூமியை,  நனைப்பவும் - ஜலத்தைப் பாய்ச்சி நனைப்பதனாலும் நீருயிர்
- அப்காய   ஜீவன்கள்,   சாங்கள்  - மரணமடையும், வரையோடு -
பர்வதங்களோடு,    எற்றவும்  -   மோதுதலாலும்,  வட்டமாதிகள் -
சுழற்காற்று   முதலியவைகள்,   பொரவும்   - அடிப்பதினாலும், வாத
காயங்கள்   - வாதகாய    ஜீவன்கள்,  பொன்றும்    நாசமெய்தும்,
எ-று.                                                  (13)

826. வெயிலும் மாரியும் மிக்க வாதமு
    மயில்செய் வெம்படைத் தீயோ டாதியாற்
    பயிர்ம ரம்முதல் பசிய காயமா
    முயிர்க ணொந்துவெந் துயரு ழக்குமே.

     (இ-ள்.)  தீயோடு - தீயுடனே, மிக்க மிகுதியாகிய, வெயிலும் -
வெய்யிலினாலும், மாரியும் - மழையினாலும், வாதமும் - காற்றினாலும்,
அயில்  செய்  - கூர்மை பொருந்திய, வெம் - கொடுமையான, படை
ஆதியால்  -  ஆயுதங்கள் முதலியவைகளினாலும், பயிர் - நெற்பயிர்,
மரம்   முதல்  - விருக்ஷங்கள்   முதலாகிய, பசியகாயமாமுயிர்கள் -
பசுமையான   காயத்தையுடைய  வனஸ்பதிகாய ஜீவன்கள், நொந்து -
வருந்தி, வெம்  - கொடுமையான,  துயர் - துக்கங்களை, உழக்கும் -
அனுபவித்து நாசமாகும், எ-று.                              (14)

827. மால்க டற்பிறந் தாலு மாவதென்
    மேலை வெவ்வினை நிற்கு மாய்விடின்
    வால்வ ளைமக ரங்க்ள் சிப்பிமீன்
    கால னன்னவர் கையின் மாயுமே.

     (இ-ள்.) வால் -வெளுப்பாகிய, வளை - சங்குகளும், மகரங்கள்
- மகர   மீன்களும், சிப்பி - சிப்பிகளும், மீன் - மற்றும் அனேகவித
மஸ்யங்களும்,   மால்    -   பெரிதாகிய,  கடல் - ஸமுத்திரத்திலே,
பிறந்தாலும்   - உற்பவித்தாலும், மேலை முன்னாலாகிய, வெல்வினை
- வெவ்விதாகிய  பாபவினையானது,   நிற்குமாய்விடில்   -  இருந்து
உதயஞ் செய்யுமானால், ஆவது - (அவற்றிற்கு) ரக்ஷணையாவது, என்
- என்ன இருக்கின்றது, காலனன்னவர் - எமராஜனுக்குச் சமானமாகிய
கொலைஞர்களுடைய,   கையின்   - கையினால்,   மாயும் - அவை
மரணமடையும், எ-று.                                     (15)

828. மலையும் வாவியும் கானு மேவியும்
    வலையும் வில்லும்வான் பொறியு மாதியா