388மேருமந்தர புராணம்  


 

    யலைசெய் வார்களுக் கஞ்சி நெஞ்சழிந்
    துலைவி லாதவெந் துயரு ழக்குமே.

     (இ-ள்.) (இன்னும் விலங்கு கதியைச்சார்ந்தவைகள்), மலையும் -
பர்வதங்களிலும், வாவியும்  - தடாகங்களிலும், கானும் - காடுகளிலும்,
மேவியும்   -   பொருந்தியும்,   வலையும் - வலைகளும், வில்லும் -
விற்களும், வான் - பெரிதாகிய, பொறியும் - எந்திரங்களும், ஆதியாய்
- முதலாக  (மற்ற   கொலைக்கருவிகளால்),  அலைசெய்வார்களுக்கு
பிடித்துக்கொல்கின்றவர்களுக்கு,   அஞ்சி  - பயந்து, நெஞ்சழிந்து -
மனங்கலங்கி,.   உலைவிலாத - நீங்காத,   வெந்துயர்    - வெப்பம்
பொருந்திய துக்கத்தை, உழக்கும் - அனுபவிக்கும், எ-று.        (16)

829. ஊன காரரும் போர்செய் வீரருந்
    தீஞர் வேள்வியுந் தீய தெய்வமு
    மீன மானவ ராதி யெய்துவர்
    தானு டம்பிடுஞ் சார்ந்த சாதியே.

     (இ-ள்.) ஊனகாரரும் - மாமிசந் தின்பவர்களும் விற்பவர்களும்,
போர்செய்  -  யுத்தஞ் செய்கின்ற, வீரரும் - வீரபடர்களும், தீஞர் -
அஞ்ஞானிகளால்   செய்யப்படும்,    வேள்வியும்   -     யாகமும்,
தீயதெய்வமும்   -  துர்த்தேவதைகளும், ஈனமானவர் - சாண்டாளாதி
தாழ்ந்த    ஜாதியாரும்,    ஆதி   - முதலாக, எய்துவர் - இன்னும்
பலவிதமாக   அடைந்திராநின்ற   பாபிஷ்டர்களினால், சார்ந்த சாதி -
விலங்கினத்தைச்   சேர்ந்த   ஜீவன்கள், உடம்பிடும் - சரீரத்தைவிட்டு
மரணமடையும், எ-று.

     தான் - அசை.                                      (17)

830. கூரி ரும்பினாற் குடுமி போழவும்
    பார மேற்றவும் பாதம் யாப்பவும்
    வார ணந்துய ரெய்து மற்றைய
    வேரு மூர்தியு மீர்த்து நையுமே.

     (இ-ள்.)   வாரணம்  -  பெரிய மிருகமாகிய யானைகள், கூர் -
கூர்மை    பொருந்திய,    இரும்பினால் - இரும்பினாற் செய்யப்பட்ட
அஞ்குச    முதலான    ஆயுதங்களினால்,  குடுமி - மஸ்தகங்களில்,
போழவும்   - பாகர்கள்  பிளக்கவும், பாரம் - மிகுதியான சுமைகளை,
ஏற்றவும்    - மேலே சுமக்கும்படி ஏற்றுதலாலும், பாதம் - கால்களை,
யாப்பவும்   - தொடரிட்டுக்        கட்டுதலாலும்,    துயரெய்தும் -
துக்கத்தையடையும்,    மற்றைய -  மற்ற மாடு குதிரை முதலிவைகள்,
ஏரும்  - உழுபடையையும், ஊர்தியும் - வண்டி முதலியவைகளையும்,
ஈர்த்து - இழுத்து, நையும் - நாசமெய்தும், எ-று.              (18)