(இ-ள்.) உள்ளம் - மனதும், மெய் - காயமும், மொழி -
வசனமும், ஒன்றுதலும் இலா - (ஒரு தன்மையாக ஞானத்தில்)
பொருந்துதலில்லாத, வெள்ளை மாந்தரும் - அறிவற்ற
அஞ்ஞானிகளாகிய மனிதரும், விலங்கிடை - திரியக் ஜாதியில், வீழ்வர்
- விழுவார்கள், தள்ளவாரம் - செய்ய வேண்டிய தருமப் பகுதிகளின்
அப்பங்கை, செயா - செய்யாமல், தனந்தேடும் - செல்வந்தேடுகின்ற,
கள்ளம் - கபடமாகிய நெஞ்சினர் - மனதையுடையவர்கள், வீழ் -
விழுகின்ற, கதியும் - கதியும், இதே - இவ்விலங்கு கதியேயாகும்,
எ-று. (21)
834. மன்றி னின்று பிறன்பொருள் வாங்குவார்
தின்று தேனொடு கட்புல சிற்செல்வார்
நின்ற நீதி கெடுத்தய லார்மனை
யொன்று வாருழ லுங்கதி யும்மிதே.
(இ-ள்.) மன்றில் நின்று - நீதிதலத்தில்
அதிகாரவர்க்கத்தினராய் நின்று, பிறன் - அன்னியனுடைய, பொருளை
- திரவியாதிகளை, வாங்குவார் - வாங்கிக் கொள்பவரும் தேனொடு -
தேனோடு, கள் - கள்ளையும், புலைசில் - மாமிசத்தையும், தின்று -
பொசித்து, செல்வார் - செல்கின்றவர்களும், நின்ற - பாரம் பரியமாய்
நின்ற, நீதி - நீதியை, கெடுத்து - நாசஞ்செய்து, அயலார் மனை -
பிறர் மனையாளை, ஒன்றுவார் - பொருந்துபவர்களும், உழலும் -
சுழல்கின்ற, கதியும் - கதியும், இது - இவ்விலங்கு கதியேயாகும்,
எ-று. (22)
835. ஒன்ற லாதுயி ரில்லை யெனச் சொலா
நின்ற தீநெறி யிற்செறி வார்களு
மொன்று நல்வழக் கோர்ந்துடைந் தானுழை
வென்றி யாக்குநர் வீழ்கதி யும்மிதே.
(இ-ள்.) ஒன்றலாது - பரமாத்மா ஒன்றேயல்லாமல், உயிர் -
ஜீவாத்மாக்கள், இல்லை - வேறில்லை, (எல்லாம்
அப்பரமாத்மகலையே), என - என்று, சொலாநின்ற - சொல்லுகின்ற,
தீநெறியில் - நன்மையில்லாத வழியில், செறிவார்களும் -
சேர்பவர்களும், ஒன்றும் - பொருந்தும்படியான, நல் - நன்மையாகிய,
வழக்கு - வழக்கின் கூறுபாட்டை, ஓர்ந்து - தெரிந்திருந்தும்,
உடைந்தானுழை - கெட்ட வழக்காளியின் பட்சமாகச் சேர்ந்து,
வென்றியாக்குநர் - வெற்றியாக்கு கின்றவர்களும், வீழ் - விழுகின்ற,
கதியும் - கதியும், இது - இவ்விலங்குகதியாகும், எ-று. (23)
836. இல்லை நல்வினை தீவினை யின்னுயி
ரில்லை யேயிறந் தார்கள் பிறத்தலு |