மில்லை யேதுறக் கத்தொடு வீடெனுஞ்
சொல்லி னார்சுழ லுங்கதி யும்மிதே.
(இ-ள்.) நல்வினை - புண்ணியவினையென்பதும், தீவினை -
பாபவினையென்பதும், இன் - இனிமையாகிய (அதாவது :
சேதனத்துவத்தையுடைய), உயிர் - ஜீவத்திரவியமென்பதும், இல்லை -
சர்வதா சூன்யமாகும், இறந்தார்கள் - இவ்வுலகத்தில்
மரணமடைந்தவர்கள், பிறத்தலும் - மறுபடியும் பிறப்பதும், இல்லை -
கிடையாது, துறக்கத்தொடு - தேவலோகத்தோடு, வீடு - மோட்சமும்,
இல்லை - கிடையாது, எனும் சொல்லினார் - என்கின்ற
சொல்லையுடையவர்களும், சுழலும் - சுழல்கின்ற, கதியும் - கதியும்,
இது - இவ்விலங்கு கதியேயாகும், எ-று. (24)
837. அரச நீதி யழித்தவம் மன்னனு
மரச நீதி யழித்த வமைச்சனும்
புரையி னாற்பிற ரைப்புணர் தீப்பெணும்
நிரய மெய்தி விலங்கினு நிற்பரே.
(இ-ள்.) அரசநீதி - இராஜநீதியை, அழித்த - கெடுத்த,
அம்மன்னனும் - அவ்வரசனும், அரசநீதி - இராஜநீதியை, அழித்த -
கெடுத்த, அமைச்சனும் - மந்திரியும், புரையினால் - குற்றத்தினால்
(அதாவது : முக்குற்றத் தொன்றாகிய மிகு மோஹபரிணாமோதயத்தால்),
பிறரை - அன்னிய புருடரை, புணர் - சேர்கின்ற, தீப்பெணும் -
கெட்ட புத்தியையுடைய ஸ்த்ரீயும், நிரயமெய்தி - நரகத்தை
யடைந்தும், விலங்கினும் - (அல்லாமலும் மந்ததரத்தால்) விலங்கு
கதியிலும், நிற்பர் - சேர்வார்கள், (என்பதாம்), எ-று. (25)
வேறு.
838. அரதனா யுதன்றன் மேக விசயமாம் யானை யந்தப்
பிரசமார் வனத்தி ருந்த பெருந்தவன் விலங்கின் வாட்கை
யுரைசெய்தா னிதனைக் கேளா பிறப்பினை யுணர்ந்திட் டூனின்
விரவிய கவளங் கொள்ளா தொழிந்துவெய் துயிர்த்த தன்றே.
(இ-ள்.) (இவ்வாறு), அந்த - முன் சொன்ன
மனோஹரமென்னும் பெயருடைத்தாகிய அந்த, பிரசம் - மதுக்களால்,
ஆர் - நிறைந்த வனத்து - உத்தி, யான வனத்திலே, இருந்த -
தங்கிய, பெருந்தவன் - பெரிதாகிய தபத்தையுடைய வஜ்ரதந்த
முனிவன், விலங்கின் வாட்கை - திரியக்கதியின் வாழ்க்கையாகிய
ஸ்வரூபத்தை, உரை செய்தான் - ஸங்கங்கட்குச் சொல்லினான்,
இதனை - இந்த விவரத்தினை, அரதனாயுதன் தன் - இராஜாவாகிய
இரத்தினாயுதனுடைய, மேக விசயமாம் - மேகவிஜயமென்னும்
பெயரையுடையதாகிய, யானை - பட்டத்து |